7ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை : அமைச்சர் செங்கோட்டையன்

மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை , ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சார்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா  மதுரை விரகனூர் அருகில் உள்ள வேலம்மாள் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் பள்ளி மற்றும் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு,  மற்றும் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவங்கிவைத்தனர்.  முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியுளித்த அமைச்சர் செங்கோட்டையன், 20 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், 7ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையும், 60 ஆயிரம்  பள்ளிகளில் கணினியும், இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றார்.

Related Posts