7 பேரை விடுதலை செய்வதில் காலம் தாழ்த்துவதா? வைகோ

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதில் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை வன்மையாக கண்டிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நிர்மலாதேவி விவகாரம் குறித்து நக்கீரனில் கட்டுரை வெளியானதை அடுத்து அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிந்தாதிரிப்பேட்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த  நக்கீரன் கோபாலை சந்திக்க முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைகாவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வைகோ கைது செய்யப்பட்டு பின்னா விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை  எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜரானார். அவரிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை  மார்ச் 4- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த  வைகோ,  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது என்றும்,  அதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல்,, தாமதப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதனைக் கண்டித்து மதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தூண்டுதலால் ஆளுநர் வேண்டுமென்றே மேலும் காலம் தாழ்த்தி வருவதை வன்மையாக கண்டிப்பாகவும் அவர் கூறினார்..  அடுத்த மாதம்9-ந் தேதி அற்புதம்மாள் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் மதிமுக கலந்து கொள்ளாது என்றும், அதே நேரத்தில் ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும்,  வைகோ தெரிவித்தார்.

Related Posts