7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

            ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசும் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

           இதனிடையே, 7 பேர் விடுதலை தொடர்பாக 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது.  இந்த வழக்கு 4ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவேண்டிய வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

           மேலும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தற்போதைய தீர்மானம் மற்றும் கூடுதல் ஆவணங்களை சேர்த்து புதிய மனுக்களை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Related Posts