7 பேர் விடுதலைக்கான பரிந்துரை அதிமுக அரசின் இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது

பேரறிவாளர் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கான பரிந்துரை அதிமுக அரசின் இமாலய சாதனையாக பார்க்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

      மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக அரசின் சாதனையை எடுத்துரைக்க பல்வேறு மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடைபெற்று வருவதாகவும், இதன் ஒருபகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதியில் நாளை மறுதினம் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பேரணியில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் எனவும் கூறினார். 7 பேர் விடுதலைக்கான பரிந்துரையை அதிமுக அரசின் இமாலய சாதனையாக பார்க்கப்படுவதாகவும் இடைத்தேர்தலில் அதிமுக கட்சியே வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts