7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது: ஜெயக்குமார் 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காகமாநில அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு இயன்றவரை முயற்சி  மேற்கொண்டு வருவதாகம்,   இந்த விஷயத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார். , 50 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு என்பது பெரிய விஷயம் இல்லைஎனவும், ஊடகங்கள் தான் அதை பெரிதுபடுத்தி வருவதாகவும்  அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,   நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் எனபது  கொள்கை முடிவு  எனவும், அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு நீட்டுக்கு விலக்கு இல்லை என மத்திய அரசு கூறியிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Related Posts