7 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி தத்தளித்து வருகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 416 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளும் இழந்து அவுட்டானது.

பின்னர் முதல் இன்னிங்ஸை துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 33 ஓவரில் 7 விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. நேற்றைய இரண்டாவது டெஸ்ட்டில் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 87 ரன்களை மட்டுமே எடுத்து தள்ளாடி வருகிறது.

Related Posts