70 ஆண்டுகளில் இல்லாத அளவு நிதி நெருக்கடி : நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார்

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாட்டின் பொருளாதார சரிவு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளித்துள்ளார். 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் உள்ளதாக கூறியுள்ளார். அரசு ஏதாவது செய்தாக வேண்டும் என வலியுறுத்திய அவர், கடந்த 5 ஆண்டுகளாக எதிர்கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சகஜ நிலையை திரும்பச் செய்ய வேண்டும் எனவும், சில துறைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு எடுக்க வேண்டும் என்றும் ராஜிவ்குமார் யோசனை கூறினார். பிரச்னை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளதால், அது நிறுத்தப்பட்டாக வேண்டும் என்றார் அவர்,

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் GDP எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.8 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவீதம் சரிந்துள்ளது. குறைவான முதலீடுகள், குறைவான உற்பத்தி ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

Related Posts