72 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்

72 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

            டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 72 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.  பேரிடர் காலங்களில் மாநிலம் பாதிக்கப்படும் போது உள்ளூர் வர்த்தகத்தில் கூடுதலாக 10 செஸ் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது எனவும்,  இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். நிலுவையில் உள்ள கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்

Related Posts