740 கோடி ரூபாய் மதிப்புள்ள சென்னை மாநகராட்சி டெண்டர்களில் நடந்துள்ள ஊழலுக்குக் காரணமான அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

 

740 கோடி ரூபாய் மதிப்புள்ள சென்னை மாநகராட்சி டெண்டர்களில் நடந்துள்ள ஊழலுக்குக் காரணமான அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட, சென்னை மாநகராட்சியில் ஊழல் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். சில ஒப்பந்தங்களில் கணவனும் மனைவியுமே போட்டியாளர்களாக டெண்டர் போட்டு தங்களுக்குள் பணியை எடுத்துக் கொண்டிருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

டெண்டர் ஊழல் பற்றி அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் மீது லஞ்ச ஒழிப்பு தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி ஊழலை மறைத்துக் கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் தற்போது இந்த மெகா டெண்டர் ஊழலையும் மூடி மறைக்க அமைச்சருக்கு துணை போகிறார் என ஸ்டாலின் சாடியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள விஜிலென்ஸ் அமைப்பை கூண்டோடு கலைக்க வேண்டும்‘ என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றது அமைச்சரின் ஊழல்களை பட்டுக்கம்பளம் போர்த்தி மறைக்கவா எனவும் ஸ்டாலின் வினவியுள்ளார்.

 

 

 

Related Posts