75 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்க நடவடிக்கை

75 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் விலங்குகளுக்கான பேரிடர் மேலாண்மை சர்வதேச கருத்தரங்கை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இக்கருத்தரங்கில் விஞ்ஞானிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் இத்தாலி, நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இந்த கருத்தரங்கில் பேரிடர் காலங்களில் விலங்குகளை காப்பது குறித்தும், இப்பிரிவில் நிபுணர்களை உருவாக்குவது மற்றும் திறன்களை வளர்ப்பது பற்றியும் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். கிராமப்புற ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வெள்ளாடு, கறவை பசு ஆகியவை வழங்கப்பட்டதாகவும், அதேபோல், 75ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டு கோழிகள் வழங்குவது குறித்து ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் கால்நடை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மேல்நாட்டு பல்கலைகழகங்களில் பயில ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts