8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்த விவசாயிகள்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர்.

உலக சாதனை நிகழ்விற்காகவும் நிலத்தடி நீரை சேமிக்கவும் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணியில் சமூக ஆர்வலர்களுடன் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறது. அதில் ஒரு கோடி பனை மரங்களை தமிழகம் முழுவதும் ஒரே நாளில் விதைப்பது என்று முடிவு செய்து, இன்று தமிழகம் முழுவதும் பனை விதைகளை விதைக்கும் பணியில் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்குட்பட்ட காசிபாளையம் பகுதியில் தமிழமுது தொண்டு நிறுவனத்தின் சார்பில் 2 ஆயிரத்து 555 பனை விதைகளை குளக்கரைகள் சாலையோரங்கள் வாய்க்கால்கரைகளில் விதைத்தனர்.

அதேபோல் கோபி பசுமை காக்கும் கரங்கள் இயக்கத்தின் சார்பில் வேட்டைகாரன்கோயில் கெட்டிச்செவியூர் செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரத்து 500 பனை விதைகளை நீர் நிலைகளின் அருகிலும் ஏரிக்கரைகளிலும் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts