8 வழி சாலை திட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே செயல்படுத்தப்படுகிறது

சென்னை-சேலம் எட்டுவழி பசுமைச்சாலை திட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கமளித்துள்ளார். 

சேலம் : ஜூன்-30

சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம் எனக்கூறினார். இந்த திட்டம் முழுமையாக நிறைவேற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும் எனக்கூறிய முதலமைச்சர், மத்திய அரசின் இந்த 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உதவி செய்வதாக தெரிவித்தார். நிலம் அளிக்கும் உரிமையாளர்களுக்கு தகுந்த இழப்பீடு பெற்று தரப்படும் என உறுதியளித்த அவர், அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சாலையாக சென்னை, சேலம் இடையேயான 8 வழிச்சாலை இருக்கும் என்றார்.விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சாலைகளை அமைப்பது அரசின் கடமை என்று விளக்கமளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டம் தாது வளங்களை வெட்டி எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு உதவும் திட்டம் என்பது கற்பனையான குற்றச்சாட்டு எனக்கூறினார்.

Related Posts