800 ஸ்டம்பிங் செய்து தோனி புதிய சாதனை

      ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வங்காள தேச வீரர்கள் 2பேரை ஸ்டம்பிக் செய்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 800 ஸ்டம்பிங் செய்து தோனி புதிய சாதனையை படைத்துள்ளார்.

      ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வங்காள தேச அணி 222 ரன்களில் ஆட்டம் இழந்தது.. சதம் அடித்த லிட்டோன் தாஸ் மற்றும் கேப்டன் மோர்தசா ஆகியோரை அசுர வேகத்தில் டோனி ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். இதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தம் 800 வீர்ர்களை தோனி ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.. இந்த சாதனையை அடுத்து அவர்,  சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் 998 ஸ்டம்பிங்குடன் தென் ஆப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் முதலிடத்தில் உள்ளார். 905 ஸ்டம்பிங்குடன் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Related Posts