அமெரிக்க துணை அதிபர் முட்டாள்தனமான கருத்துக்களை தெரிவித்திருப்பதாக குற்றச்சாட்டு

அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் அறியாமை மற்றும் முட்டாள்தனமான கருத்துக்களை தெரிவித்திருப்பதாக வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.

வடகொரியா : மே-24

அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் தனது பேட்டி ஒன்றில், பேச்சுவார்த்தை விவகாரத்தில் வடகொரியா அமெரிக்காவுடன் ஏதேனும் விளையாட நினைத்தால் அது பெரும் தவறாக முடியும் என்றும் வடகொரியாவுக்கு லிபியாவின் முடிவு ஏற்படும் என்றும் எச்சரித்தார். கடாஃபியைப் போன்று கிம் ஜோங் உன்னும் கொல்லப்படுவார் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், வடகொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சான் ஹுய் தனது அறிக்கையில் மைக் பென்ஸ் சுய கட்டுப்பாடின்றி ஆணவமான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பேச்சுவார்த்தைக்காக தாங்கள் அமெரிக்காவை கெஞ்சப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், தங்கள் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா நடந்துகொண்டால் பேச்சுவார்த்தையை மறுபரிசீலனை செய்ய தங்கள் நாட்டுத் தலைமைக்கு பரிந்துரைக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

Related Posts