9 ஆண்டு கால பகையை பழித்தீர்க்கவே ப.சிதம்பரத்தை கைது செய்ய அமித்ஷா தீவிரம்

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான 9 ஆண்டு கால பகையை பழித்தீர்க்கவே, அவரை கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது, குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்தார். அப்போது குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் சாட்சியாக கருதப்பட்ட துளசிராம் பிரஜாபதி என்பவரும் தப்பி ஓட முயற்சி செய்ததாகக் கூறி, கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு உள்ளது என சி.பி.ஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தின் மூலமாக அது நிரூபணமும் ஆனது. இதனால் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்தார். சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவரை, 2010-ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது ப. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் மூன்று மாதங்களுக்கு பிறகு அமித் ஷா ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது, அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அதே சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Posts