மாவட்டம்

தாம்பரம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து : 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் மேம்பாலம் மீது சிமெண்ட் கலவை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஓட்டுனர் கார்த்திகேயனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். லாரியை மீட்கும் பணியும் துரித கதியில் நடைபெற்றது. இதனிடையே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

Show More

Related News

Back to top button
Close