உலகம்

வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கா – சீன

அமெரிக்கா – சீன ஆகிய நாடுகள் பரஸ்பரம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்குகொண்டு வந்துள்ளன.

சீனாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக கடந்த ஓராண்டாக வர்த்தக மோதல் நடந்து வந்தது. கடந்தாண்டு ஜூனில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையிலான சந்திப்பின் போது, சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்பு கொண்டது. இதையடுத்து இரு நாடுகளும் இது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வதென முடிவு செய்தன. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில், சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் – சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வர்த்தக போரை நடத்தி வந்த அமெரிக்க- சீன ஆகிய நாடுகள் இன்று முதற்கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.

Show More

Related News

Back to top button
Close