உலகம்

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் – போப் வேண்டுகோள்!

அமெரிக்கா, ஈரான் நாடுகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் அறிவுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. இதனால் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவும் ஈரானும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார். வாடிகனில் பேசிய அவர் மத்திய தரைக்கடல் பகுதியிலும் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் ஈடுபடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close