தமிழ்நாடு

இலங்கை கடற்படையினரை மிஞ்சிய ஆந்திர மீனவர்கள்

நாகூர் மீனவர்களுக்கு சரமாரி தாக்குதல்

எல்லைத்தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, நாகூர் மீனவர்கள் 20 பேரை ஆந்திர மாநில மீனவர்களை சரமாரியாகத் தாக்கி சிறைபிடித்துள்ளனர்.

நாகபட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த மீனவர்கள் 20 பேர் கடந்த 8 தினங்களுக்கு முன் கடலுக்கு சென்றனர். இவர்கள் நெல்லூர் மாவட்டம் காவலி கிராம கடல்பகுதியில் மீன்பிடித்த போது, நாகூர் மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சரமாரியாகத் தாக்கியதுடன் படகுகளுடன் அவர்களை சிறைப்பிடித்துள்ளனர்.  இது குறித்து தகவலறிந்து வந்த அப்பகுதி போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவு பெறாத நிலையில் காயமடைந்த மீனவர்கள் காவலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மீனவர்களின் பிடியில் இருந்து தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு நாகூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வாக நடந்தேறி வருகிறது. ஆனால் ஆந்திர மீனவர்கள் சிறைப்பிடித்து தாக்கிய சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related News

Back to top button
Close