உலகம்

வான்வழி தாக்குதலில் பிறந்த குழந்தை உள்பட 8 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதலில் பிறந்த குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தாக்குதல் நடத்தி வருகின்றது. தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் வான்வழி படைகள் நடத்தும் தாக்குதலில் அப்பாவி மக்களும் பலர் இறந்து போகிறார்கள். இந்நிலையில், கோஸ்ட் மாகாணத்தில் வான்வழி தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது.  இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். சமீபத்தில் பிரசவம் முடிந்து மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வீடு திரும்பிய நிலையில். இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் பிறந்த குழந்தை மற்றும் பெண்ணின் மற்றொரு குழந்தை, உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

Show More

Related News

Back to top button
Close