Home Articles posted by Dharma

ஆயிரக்கணக்கான வீடுகள் இந்த வெள்ள நீரில் மூழ்கின. ஆனால் கிராம மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆலோசணை மேற்கொண்டார்.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று பிற்பகலில் ஓகி புயலாக மாறி, கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இந்தியாவின் கலாச்சாரம் வெகுவாகப் பரவி வரும் நிலையில், உலகம் முழுவதும் பல இடங்களில் இந்து மதக் கடவுள்களின் கோவில்கள் கட்டப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கட்டப்பட்டு வருகிற உலகின் மிகப்பெரிய கோவில்களுள் ஒன்றாக இருக்கப்போகும் ஸ்ரீ சுவாமி நாராயணன் திருக்கோவில் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

இந்த திருக்கோவில் ராபின்வில்லில் உள்ள பாப்ஸ் (BAPS) என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த கோவில் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோவில், உலகின் மிகப் பெரிய கோவில்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாரம்பரியத்தோடு நியூ ஜெர்சியில் குடிகொள்ளப் போகுகிறார் ஸ்ரீ சுவாமி நாராயணன் என்றே கூறவேண்டும் இக்கோவில் அமெரிக்காவில் அமைந்தாலும் முழுவதுமாக இந்திய கோவில் கடுமான கலையில் கட்டப்படுகின்றது.

மார்பில் கற்களால் உருவான இக் கோவில் முழுவதும் சிற்பக் கலைகளால் சூழ்ந்துள்ளது.162 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ள இக்கோயில் 42 அடி உயரம் மற்றும் 133 அடி அகலம் கொண்டுள்ளது., 13,499 சிற்ப வேலைபாடுகள் கொண்டுள்ள இந்த கோவிலில், 98 தூண்கள், 66 மயில் போன்ற வளையங்கள், 91 யானை சிற்பங்கள், 144 புனித கடவுள்களின் உருவங்களும் மற்றும் பல சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பில் கற்களால் செதுக்கப்பட்ட இந்த சிற்பங்களும் தூண்களும் நியூ ஜெர்சிக்கு செல்வதற்கு முன்பே இந்தியாவில் முழுவதுமாக செதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிதம்பர ரகசியம்! அதனைத் தாண்டி பல அறிவியல்! அனைத்தும் நிரம்பிய சிதம்பர நடராசர்! ஒரு சிறு பார்வை!

உலகின் மிகப்பெரிய விண்வெளி அராய்ச்சி மையம் நாசா. அங்கு, எந்த ஒரு சிறப்பு விக்ரகமும் இல்லை. நடராசர் சிலையைத் தவிற!

அது ஏன் என்று பார்க்கும் போது, ஒரு அறிவியல் விளக்கத்தோடு பதிலளிக்கின்றனர் அறிஞர்கள். சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக, பல கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான், ஒட்டுமொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

அதிசயத்தில் வாயப் பிளக்கும் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். சிதம்பரம் நடராஜர் கோயில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்கூறுடனும் பொருந்துவது குறிப்பிடத்தக்கது. கோயிலில் பொதிந்திருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாதவை. இதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிந்த நம் முன்னோர்கள், சிதம்பரத்தில் கோவில் கட்டி சிறந்த பூஜைகளுடன் வழிபட்டு வந்துள்ளனர்.

பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

9 ஆயிரத்து 300 அரசு காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.

டிஎன்பிஎஸ்சி சொல்வது போல ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விதிகள் தான் என்றால் அதில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் என்ன என்பதை ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை என்பதே அனைவரின் கேள்வியும்.

அமெரிக்காவின் சர்வதேச கல்வி மையம் 2016-17 -ம் கல்வியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் தற்போது 10.8 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில், 3.50 லட்சம் மாணவர்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு சீன மாணவர்களின் எண்ணிக்கை 6.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதிக மாணவர்கள் பட்டியலில் இந்தியா, 1.86 லட்சம் பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இது 12.3 சதவீதம் அதிகமாகும். மொத்த வெளிநாட்டு மாணவர்களில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 17.3 சதவீதமாகும். இந்திய மாணவர்களில் 56.3 சதவீதம் பேர் பட்டப் படிப்பை படிப்பதற்காகவே அமெரிக்கா வருகின்றனர்.

வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் அமெரிக்க மாணவர்கள், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை அதிகம் விரும்புகின்றனர். இந்தப் பட்டியலில், இந்தியா 15-வது இடத்தில் உள்ளது. கடந்த கல்வியாண்டில், இந்தியாவில் படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை 4,438-ல் இருந்து 4,181 ஆக குறைந்துள்ளது.என கூறியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.

அதுபோல, மழை பெய்தால் விடுமுறை அறிவிப்பது குறித்து காலை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் சொல்லி இருந்தனர்.

இன்று அதிகாலை ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை காரணமாக ஐந்து நாட்களுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரிகளின் ஆலோசனையின்படி பள்ளிகளில் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, 9 பள்ளிகள் தவிர்த்து இன்று சென்னையில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒக்கினாவா தீவை ஒட்டியுள்ள கடல் பகுதி வழியாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஒரு ராணுவ விமானம் நேற்று பறந்து கொண்டிருந்தது. ஜப்பான் ராணுவத்துடன் இணைந்து நடத்தப்பட்ட வழக்கமான பயிற்சிக்கு பின்னர் அங்குள்ள அமெரிக்க கடற்படையின் ரொனால்ட் ரீகன் போர் கப்பலில் தரை இறங்குவதற்காக சென்ற அந்த விமானம் மதியம் சுமார் 2:45 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிலை தடுமாறி ஒக்கினாவா தீவின் தென்கிழக்கே கடலில் விழுந்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 11 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த மீட்புப்பணியில் 8 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மற்ற மூன்று பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்களை அமெரிக்கா ராணுவத்தினரும், ஜப்பான் ராணுவத்தினரும் இணைந்து தேடி வருகின்றனர்.

லெபனான் பிரதமர் சாட் அல் ஹரிரி கடந்த 3-ம் தேதி திடீரென சவுதி அரேபியாவுக்குச் சென்றார்.  தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக  மறுநாள் தொலைக்காட்சியில் அறிவித்தார். ஆனால், தொடர்ந்து அவர் சவுதி அரேபியாவிலேயே தங்கியிருக்கிறார். பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அவருக்கு நெருக்கமான லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் அவரது ராஜினாமாவை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. இதற்கிடையே ஹரிரிக்கு பிரான்ஸ் நாடு அழைப்பு விடுத்துள்ளது.

லெபனான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஹரிரியை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்த  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முயற்சித்துவரும் நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட சாட் ஹரிரி இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்தடைந்தார். லெபனான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

பாரிசில் உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ள ஹரிரி, அங்கிருந்தவாறு லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்-ஐ தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். வரும் 22-ம் தேதி நடைபெறும் லெபனான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக நிச்சயமாக நாடு திரும்புவேன் என அவர் அதிபரிடம் உறுதி அளித்துள்ளார்.