Home Articles posted by Madhimugam (Page 3)

புதிய பாடத்திட்டத்தால் அதிகளவில் ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெர்வித்துள்ளார்

திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டபட்ட கட்டிடங்களை பார்வையிட வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார். தற்காலிக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளே நியமித்துகொள்ளலாம் என்று அவர் கூறினார்.  புதிய பாடத்திட்டதால் ஆசிரியர் தகுதி தேர்வில் அதிகளவில் தோல்வி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பொதுமக்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

கணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் தமக்கு இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் இருந்தால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள் பற்றிய முழுவிவரத்தை வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் அத்தனையும் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டவை என்று தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரங்களை திரட்ட, 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. காவலில் உள்ள நிலையில், முறைகேடு தொடர்பாக ஏற்பட்டுள்ள பண பரிவர்த்தனைகள் குறித்து பிரிட்டன், மொரிஷியஸ், பெர்முடா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகிய 5 நாடுகளி்ல்உள்ள விசாரணை ஏஜென்சிகளுக்கு சி.பி.ஐ.கடிதம் எழுதியுள்ளதாக சி.பி.ஐ. வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் சிக்கியுள்ள சிதம்பரத்திற்கு எதிராக ஆதாரங்களை திரட்ட சி.பி.ஐ தீவிரம் காட்டி வருவதால், இந்த வழக்கு வேகமெடுத்து வருகிறது

அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு முறைப்பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , பஹ்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி முதற்கட்டமாக பிரான்ஸ் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் இமானுவெல் மேக்ரோனை சந்தித்தார். அப்போது இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார். பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாடுகளின்  நட்புறவு, அதனை மேலும் வலுப்படுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார் தொடர்ந்து அபுதாபி பட்டத்து இளவரசர் ஷே க் முகம்மது பின் ஜியாத் அல் நெஹயானை சந்தித்து இரு தரப்பு பஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிறார்.

நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார், ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது; இப்போது இருப்பது போன்ற பணப்புழக்க பற்றாக்குறையை சந்தித்தது கிடையாது என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து பொருளாதார நிலை மேம்பட மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகளை, டெல்லியில் நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்நிலையில, நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், தனது முந்தைய கருத்துகளை மறுக்கும் வகையில் பல்டி அடித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில், “தனது கருத்துகளை திரித்துக் கூறுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்வதற்கான துணிச்சலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், அது தொடரும் என்றும் பதற்றம் அடையவோ, பதற்றத்தை பரப்பவோ தேவையில்லை” என அவர் கூறி உள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் ஆலைக்கு விதித்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த்த்த்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆகஸ்ட் 29ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? என தெரியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவதே திமுகவின் நோக்கம் என்று தெரிவித்தார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என அவர் உறுதிபட கூறினார்.

சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தவறு என டெல்லியில் போராடவில்லை என்றும்  கையாண்ட விதம் தவறு, முறையாக அமல்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டி போராடினோம் என்றும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? என தெரியவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் வினவினார்.

அரசியல் தலைவர்கள் வர வேண்டாம் என காஷ்மீ்ர் அரசு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழுவினர் காஷ்மீர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அரசில் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் இதுபோன்ற சம்பவம் காஷ்மீர் மக்களுக்கு தேவையற்ற அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்றும் அவ்வாறு வருவது கட்டுபாடுகளை மீறுவதாக அமையும் என்பதால் தலைவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என காஷ்மீர் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் இன்று ஸ்ரீநகருக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீருக்கு  வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த இந்தியா, அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அறிவிப்பிற்குப் பிறகு காஷ்மீரின் நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக சென்ற குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றனர். அப்போது அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கட்சியின்  சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட  எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகருக்கு இன்று  செல்கின்றனர் என தகவல் வெளியானது.

இவர்களுடன் காங்கிரசின் ஆனந்த் சர்மா, சிபிஐ கட்சியின் ராஜா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் உடன் செல்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்துக்குள் நாசவேலைகளைச் செய்ய பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியின் பெயர் இலியாஸ் அன்வர் என்பதும் அந்த எச்சரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நெற்றியில் குங்குமம் மற்றும் விபூதியை வைத்துக் கொண்டு இந்துக்களை போல காட்டிக் கொண்டு ஊடுருவியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இந்துக் கோயில்கள் தேவாலயங்கள் மசூதிகள் போன்ற இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் கோவையை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் இந்த தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, இந்திய – இலங்கை கடல் எல்லைப் பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதியில் தமிழக கடலோர காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.