தேசம்

5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா, வேண்டாமா ? முடிவு எடுக்கப்படும்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒதுக்கப்படும் ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து வரும் 26ஆம் தேதி முடிவை தெரிவிப்பதாக சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நிலபரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில், சன்னி வக்ஃபு வாரியத்துக்கு 5 ஏக்கர் இடத்தை வழங்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் சன்னி வக்ஃபு வாரியம் சார்பில் வரும் 26ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் சுஃபர் ஃபரூக்கி தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிலத்தை ஏற்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் தீர்ப்பு குறித்தும், 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா, வேண்டாமா என்பது பற்றியும் முடிவு எடுக்கப்படும் என்றும் ஃபரூக்கி கூறியுள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close