உலகம்

தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதற்கு பிரிட்டன் கண்டனம்

ஈரானில் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டார், இதற்கு பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஒப்புக் கொண்டது. இதனைக் கண்டித்து டெஹ்ரானில் உள்ள அமீர் கபீர் பல்கலைகழகம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில் ஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மேக்கைர் பங்கேற்றார். அப்போது போராட்டக்காரர்களுடன் சேர்த்து பிரிட்டன் தூதரையும் கைது செய்த பாதுகாப்பு படையினர், சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, ஈரான் பகிரங்கமாக சர்வதேச விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

Tags
Show More

Related News

Back to top button
Close