தமிழ்நாடு

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சாதிச்சான்று கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் சாதிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் மூலம் திறந்து வைத்த செங்கோட்டையன், பின்னர் கைப்பந்து விளையாடி மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐந்து மற்றும் எட்டாம் வுகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சாதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டுமென எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார். பசுமை தீர்ப்பாயத்தின் வேண்டுகோளை ஏற்று மாணவர்கள்  பயன்படுத்திய புத்தகங்களை திரும்ப பெற்று அதனை பாதுகாப்பாக வைத்து மீண்டும் பயன்படுத்தும் வழிமுறைகளை எவ்வாறு  செயல்படுத்துவதென முதலமைச்சருடன் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

கொடிவேரி தடுப்பணை அருவிக்கு வரும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதுடன், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பத்து உடை மாற்றும் அறைகள், குளிக்கும் இடத்தில் கம்பி தடுப்புகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். செயல்படாமல் உள்ள ஊராட்சி சேவை மையங்கள் விரைவில் செயல்படத்தொடங்கும் என்றும், அது குறித்து முதலமைச்சர் நல்ல அளிவிப்பு வெளியிடுவார் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Show More

Related News

Back to top button
Close