Home Archive by category உலகம் (Page 2)

உலகம்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த  மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசை பாகிஸ்தான் கடுமையாக விமர்சனம்  செய்து வருகிறது. இருநாடுகள் இடையிலான தூதரக உறவு, ரெயில் சேவை, பேருந்து சேவை, வர்த்தக உறவை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,  இந்தியாவில் பிரதமர் மோடி  தலைமையிலான அரசு, சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாகவும், அவரது அரசின் செயல்பாடுகள், பாகிஸ்தானுக்கும், இந்தியாவில் வாழும்  சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் இந்தியாவிடமுள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை, சர்வதேச நாடுகள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிடுவதற்காக பாகிஸ்தான் சீனா மூலமாக மேற்கொண்ட முயற்சியும் வெற்றியடையவில்லை.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என உலக நாடுகளும், ஐ.நா.வும் கூறியுள்ளது. இந்திய அரசு இனி பேச்சுவார்த்தையென்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமாகதான் இருக்கும் என தெரிவித்த்து

இதற்கிடையே பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க  முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கன் பிரச்னையுடன் காஷ்மீரை தொடர்பு படுத்த பாகிஸ்தான் முயற்சிப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கன் எல்லையில் இருக்கும் படைகளை காஷ்மீர் எல்லைக்கு அனுப்ப வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அசத் மஜீத் கான் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை மூலம், ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான அமெரிக்கா – தாலிபன்கள் இடையிலான பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கன் பிரச்னையுடன் காஷ்மீரை தொடர்புபடுத்த, பாகிஸ்தான் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆப்கானிஸ்தான் அரசு, பாகிஸ்தானின் பொறுப்பற்ற தன்மையை இது காட்டுவதாக கூறியுள்ளது. காஷ்மீர் பிரச்னை, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னை, பாகிஸ்தான் வேண்டுமென்றே ஆப்கனை இதில் தொடர்பு படுத்துவதாக அமெரிக்காவுக்கான ஆப்கன் தூதர் ரோயா ரஹ்மானி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் கலந்து காணப்படுகிறது. சர்வதேச அளவில், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட சில நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘எனது நல்ல நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவரிடமும் பேசினேன். வர்த்தகம், கூட்டாண்மை குறித்தும், முக்கியமாக காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலை குறைக்க இந்தியா-பாகிஸ்தான் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினேன். சூழல் கடுமையானதுதான், ஆனால், நல்ல முறையில் உரையாடல் நிகழ்ந்து முடிந்தது என டிரம்ர் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, தொலைபேசி உரையாடல் 30 நிமிடங்கள் நடந்ததாகவும், அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துக் கொள்கிறார் என அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி குற்றம் சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பிரதமர் மோடி அரசின் கீழ் இருக்கும் அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்க முடியாது, இதனை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில், அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்றாலும், வரும் கால சூழலுக்கு ஏற்ப அணுஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாசிசம் மற்றும் இந்து மேலாதிக்க மோடி அரசின் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனம் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். இது குறிப்பிட்ட பிராந்திய பிரச்னை மட்டுமல்ல, உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே 40 லட்சம் முஸ்லீம்கள் கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் போக்கு மோசமாக உள்ளதாகவும், சர்வதேச நாடுகள் இப்போதே தலையிடவில்லையெனில் இது மேலும் பரவக்கூடும் என்றும் இம்ரான்கான் டிவிட்டரில் கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒரு நாள் தொரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த இந்த மிரட்டல் இ-மெயில் தகவலை அங்கிருந்து ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பகிரப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இந்த தகவலை பிசிசிஐ மறுத்துள்ளது. பயங்கரவாதிகள் மிரட்டல் தொடர்பாக வந்த தகவல் புரளி என்றும், இருந்தாலும் இந்திய அணிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுபற்றி ஆண்டிகுவா அரசுக்கு இந்திய தூதரகம் தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் மோடி அரசின் கீழ் இருக்கும் அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்க முடியாது, இதனை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில், அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்றாலும், வரும் கால சூழலுக்கு ஏற்ப அணுஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாசிசம் மற்றும் இந்து மேலாதிக்க மோடி அரசின் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனம் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். இது குறிப்பிட்ட பிராந்திய பிரச்னை மட்டுமல்ல, உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே 40 லட்சம் முஸ்லீம்கள் கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் போக்கு மோசமாக உள்ளதாகவும், சர்வதேச நாடுகள் இப்போதே தலையிடவில்லையெனில் இது மேலும் பரவக்கூடும் என்றும் இம்ரான்கான் டிவிட்டரில் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் காபுலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் காபுல் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என 65 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். சுமார்180-க்கும் மேற்படோர் படுகாயமடைந்தனர். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக பூட்டான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமது வெளிநாட்டு பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், இந்தியா-பூட்டான் இடையிலான நட்பு ஆழமானது பழமையானது என்று குறிப்பிட்டுள்ளர்.

நம்பகமான நட்புநாடாகவும் அண்டை நாடாகவும் பூட்டான் விளங்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளர்.

தமது பயணம் மூலம் இந்த நட்பும் இருநாடுகளின் எதிர்காலமும் மேலும் வளம்பெறும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்கை நட்பு ரீதியாகச் சந்தித்து பேசும் பிரதமர் மோடி, அந்நாட்டின் 4 வது மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியாலையும் சந்தித்து பேசுகிறார்.

சந்திப்பின்போது, பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இந்தப் பேச்சுவார்த்தை பலனுள்ளதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தின் இரண்டாம் நாளில் பூட்டானில் ராயல் பல்கலைக்கழகத்தின் இளம் மாணவர்களுடன் கலந்துரையாட  இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராக மீண்டும் பதவியேற்ற பின் பிரதமர் மோடி, முதல் முறையாக பூட்டான் சென்றடைந்தார். அவங்கு பிரதமர் மோடிக்கு பூட்டான் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய சுதந்திர தினம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நூற்றுக்கணக்கான  இந்திய வம்சாவளியினர் இந்திய தூதரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரண்டனர்.

மூவர்ணக் கொடிகளை ஏந்தியும் , தேச பக்தி பாடல்களைப் பாடியபடியும் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்தைப் புகழ்ந்தனர். அப்போது காலிஸ்தான் குழுவைச் சேர்ந்த பத்து பதினைந்து பேர் இந்தியாவுக்கு எதிராக கோஷம் போட முயற்சித்தனர். ஆனால் இந்திய ஆதரவு கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் அங்கிருந்து விலகிச்சென்றனர்

இதே போன்று லண்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்திலும் இந்தியாவின் 73வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ரஷ்யாவில் வானில் பறந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக வயல் வெளியில் தரையிறக்கப்பட்டதால், அதிலிருந்த பயணிகள் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர்.

ரஷ்யாவில் பறவைகள் மோதியதால் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட பயணிகள் விமானம், மக்காச்சோள தோட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் சாதுர்யமான செயல்பாட்டால், 233 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுவோஸ்கி விமான நிலையத்திலிருந்து, யுரல் ஏர்லைன்ஸ் விமானம் 233 பயணிகளுடன் சிம்ஃபெரோபோல் நகருக்கு புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மீது, பறவைகள் மோதின. இதனால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, சற்றும் தாமதிக்காமல், விமானத்தை மக்காச் சோளம் பயிரிடப்பட்ட தோட்டத்தில் இறக்கினார். இதில் 27 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட போதும், விமானியின் சாதுர்யத்தால் 233 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சாதுர்யமாக செயல்பட்ட விமானிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.