Home Archive by category உலகம் (Page 3)

உலகம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இனிமேல் சலுகைகளை தர முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியா மாகாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இருநாடுகளும் வளரும் நாடுகள் என்ற நிலையில் இல்லை என்றும் வளர்ந்த நாடுகளாகி விட்டன என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

உலக வர்த்தக அமைப்புடன் அமெரிக்கா நடத்திய வர்த்தக மோதல்கள், சுற்றுச்சூழல் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியது போன்ற பிரச்சினைகளில் அமெரிக்கா அடைந்த வெற்றியை பட்டியலிட்ட டிரம்ப், வளரும் நாடுகளுக்கு அதிக அளவில் வர்த்தகச் சலுகைகளை இனி கொடுக்கப்போவதில்லை என்று கூறினார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்திய பிரதமர் மோடி மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். அப்போது காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசிய அவர், “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பிரதமர் மோடி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என தெரிவித்தார். இந்த முடிவு மோடிக்கும், பா.ஜ.க.விற்கும் மிகப்பெரிய நஷ்டத்தை விளைவிக்கும் என்றும் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி விட்டார்கள் என்றும் கூறினார்.

ஐ.நா.விடமும் சர்வதேச நீதிமன்றத்திடமும் இந்த விவகாரத்தை கொண்டு செல்வோம் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பன்முகத்தன்மையும், மதசார்பின்மையும் அழிந்து தற்போது அங்கே பயங்கரவாதம் பெருகிவிட்டது என்று தெரிவித்தார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியா அதன் அரசியலமைப்புக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் எதிராக செயல்பட்டுள்ளதாக கூறிய அவர், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு குலைந்து மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அப்போது அது ஒரு நிலையற்ற குடியரசாக மாறிவிடுகிறது” என்று அவர் கூறினார்.

இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உலக  வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய  பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா  ஆகியவை இனியும் வளரும் நாடுகள் அல்ல என்றும் அதனை கூறிக்கொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளும், வளரும் நாடுகள் எனக்கூறிக்கொண்டு, சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இந்த இரண்டு நாடுகளும் உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் பிராந்தியத்தில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது.

தேசிய வனவிலங்குப் பூங்காவுக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். அவசர காலசேவைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

35 தீயணைப்பு வீரர்கள் 11 ஹெலிகாப்டர்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று இடங்களில் தனித்தனியாக தீஎரிந்து கொண்டிருக்கிறது. தீயுடன் கடும் புகை மூட்டமும் ஏற்பட்டிருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயக்கமடைந்தனர்.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் முழுவதும் ரிமோட்டில் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருகிறார்.

அர்மண்ட் என்ற இடத்தைச் சேர்ந்த கணினி மென்பொறியாளரான பிஜோர்ன் ஹர்ம்ஸ் என்பவரே இந்தக் காரை டிவமைத்தவர். குழந்கைகளின் கார் போல்ரிமோட் மற்றும் ஜாய் ஸ்டிக் போன்றவற்றின் மூலம் அவர் காரை இயக்கிக் காட்டுகிறார்.

அடுத்த கட்டமாக குரல் பதிவின் மூலம் காரைக் கட்டுப்படுத்தும் வகையில் மென்பொருளைக் கண்டறிந்து காரை இயக்க முயன்றுவருவதாக பிஜோர்ன் தெரிவித்துள்ளார்.

தற்போது மணிக்கு 141 கிலோ மீட்டர் வேகம் வரை இந்தக் காரை இயக்கமுடியும் என்று கூறும் அவர்கடந்த 1985ம் ஆண்டு வெளியான பேக் டூ  பியூச்சர் என்ற திரைப்படத்தில் வரும் கார் போன்றே தற்போதைய காரையும் வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

கிரீன்லாந்து நாட்டில் ஒரே நாளில் 11 பில்லியன் டன் பனி உருகியிருப்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

வழக்கமாக, கோடையின் போது, 50 சதவீதம் வரை கிரீன்லாந்தின் மேற்பரப்பில் பனி உருகுவதும், பின்னர் ஆர்க்டிக் குளிர்காலம்வரும்போது அது மறுபடியும் உறையும் நிகழ்வும் வழக்கமாக நடந்து வருவதாகும்.இந்நிலையில் 197 பில்லியன் டன் பனி இருக்கும்கிரீன்லாந்து பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 பில்லியன் டன் பனி உருகுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாகஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடும் வெப்பத்தின் காரணமாக  ஒரே நாளில் 11 பில்லியன் டன் பனி உருகியுள்ளது. இந்த நிகழ்வு  கடல்நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்யுமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் இறந்த முதலை வயிற்றிலிருந்து மனித அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்  உலோக தகடுகண் டெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அருகே கூவாங்கோ என்ற இடத்திலுள்ள, ஜான் லீவர் என்பவருக்கு சொந்தமான முதலைபண்ணையில் வயது முதிர்ந்த முதலை ஒன்று உயிரிழந்தது. சுமார் 15 அடி நீளமும் ஆயிரத்து 500 பவுண்ட் எடையும் கொண்ட அந்தமுதலையை உடற்கூராய்வு செய்ததில், சில விநோத பொருட்கள் கிடைத்துள்ளன.

சில வெள்ளி நாணயங்கள் மற்றும் கூழாங்கற்களுடன் எலும்புமுறிவின் போது மனித உடம்பில் வைத்துக்கட்டப்படும் உலோகத்தகடும், 6திருகுகளும் கிடைத்துள்ளன.

முதலைகளின் வயிற்றிலிருந்து இதுபோன்ற பொருட்கள் கிடைப்பது வழக்கமென்ற போதிலும், உலோகத்தகடு கிடைத்திருப்பதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, விமான சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியாவில் நடந்த பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடரில், இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தோனேஷியாவில், 23வது பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு இறுதிப் போட்டியில்  இந்தியாவின் மேரி கோம், ஆஸ்திரேலியாவின் பிராங்க்ஸ் ஏப்ரல் மோதினர். இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மேரி கோம், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

மற்ற எடைப்பிரிவு இறுதியில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சுவாமி, ஆனந்தா பிரல்ஹத், அங்குஷ் தஹியா, ஜமுனா போரோ, சிம்ரன்ஜித் கவுர், மோனிகா  ஆகியோர் தலா ஒரு தங்கம் வென்றனர். இறுதியில் தோல்வி கண்ட இந்தியாவின் கவுரவ் பிதுரி  தினேஷ் தாகர், தலா ஒரு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர்.

மியன்மார் நாட்டில் ஹாகந்த் அருகே  கயின் சௌங் என்ற கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் நேற்று 2 மணியளவில்  திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் உயிரிழந்த நிலையில் 18 பேரை மீட்டனர். அதனைதொடர்ந்து 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.