Home Archive by category கல்வி (Page 3)

கல்வி

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்கள் கடந்த 15-ஆம் தேதி தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், பல மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் பிழைகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் பிழைகள் இருந்தால் மாணவர்கள் மே 3-ஆம் தேதிக்குள் சரி செய்துகொள்ள வேணடும் என அறிவறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆங்கில வழியில் தேர்வு எழுதும் சிலருக்கு மட்டும் மற்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த தம்பதியர்  கணேசன் சித்ரா.  கூலித்தொழிலாளிகளான இவர்களது மகள் சஹானா பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உயிரி கணிதவியல் பாடப் பிரிவில் படித்து, பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு, 524 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சஹானா, தங்களுக்கு சொந்த வீடு இல்லாத நிலையில், தென்னை மரத்தடியில் குடிசை அமைத்து வசித்து வருவதாகவும்   மின்சார வசதி இன்றி இரவில்  தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து  பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றதாகவும் கூறினார்.

‘கஜா’ புயலால் சேதமடைந்த தங்கள் வீட்டை சிலரின் உதவியுடன், சீரமைத்ததாகவும் மருத்துவராக வேண்டும் என்பது தனது கனவு எனவும்  கூறிய அவர் ‘நீட்’ தேர்வு எழுத  தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.  வறுமை நிலையில் உள்ள  தனக்கு உயர்கல்வியை தொடர அரசு மற்றும் அன்புள்ளம் கொண்டோர் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சென்னை அடுத்த பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகத்தில் 9-ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலைகழக வேந்தர் ஐசரிகணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். பின்னர்  குடியரசு தலைவருக்கு நினைவுபரிசு வழங்கி கௌரவிக்கபட்டது. விழாவில் பேசிய அவர், தாய்மொழிபற்றியும், உடல்நலம்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் ராணுவதுறை செயலாளர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி ஓட்டபந்தய வீராங்கனை பி.டி உஷா, லாஜிஸ்டிக் தலைவர் சேவியர் பிரிட்டோ ஆகியோர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றனர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியபெருமக்கள் கலந்துகொண்டனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பொறியியல் கலந்தாய்வு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக கடந்த 22 ஆண்டுகளாக பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைகழகம் நடத்தி வருகிறது. இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கமிட்டி தலைவர் பதவியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அண்மையில் விலகினார். மாணவர் சேர்க்கைக்கான கமிட்டி தலைவராக உயர்கல்வித்துறை செயலாளராகவும், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையரை இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என சூரப்பா கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை தமிழக அரசு கருத்தில் கொள்ளாததால், அவர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து  கலந்தாய்வை யார் நடத்த வேண்டும் என்ற முடிவு எட்டப்படாததால், கலந்தாய்வு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது பொறியியல் படிப்பு மீதான மாணவர்களின் ஆர்வம் தற்போது குறைந்து வரும் நிலையில், கலந்தாய்வு முடிவுகளும் எட்டப்படாததால் மாணவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடுவது தொடர்பாக இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். முன்னதாக பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடுவது தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகனுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர்  இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வி செயலர் மங்கத் ராம் ஷர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில  மொத்தமுள்ள 53 அரசு மற்றும் 82 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 694 மாணவ- மாணவிகள் இந்தாண்டு  பிளஸ்-2  தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 657 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 6 ஆயிரத்து 236 பேரும் , மாணவிகள் 7 ஆயிரத்து 421 பேரும் அடங்குவர். இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 92புள்ளி 94 சதவீதம் எனவும். இது கடந்த ஆண்டைவிட 5புள்ளி 62 சதவீதம் அதிகம் எனவும் பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக   மதிப்பெண் அனுப்பப்பட்டது. நாளை காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 24-ந்தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன்-2019 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.  பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவை வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் 91புள்ளி 3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல், மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93 புள்ளி 64 சதவீதமும், மாணவர்கள் 88புள்ளி 57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை திருப்பூர் மாவட்டம் 95புள்ளி 37 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு 95புள்ளி 23 சதவீத தேர்ச்சியும், பெரம்பலூர் 95புள்ளி 15 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. கோவை 95புள்ளி01 சதவீதம், நாமக்கல் 94புள்ளி97 சதவீத தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆயிரத்து 281 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தேர்வு எழுதிய கைதிகள் 45 பேரில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அரசு தேர்வுகள் இயக்குநரக அதிகாரி ஒரவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் வருகைப் பதிவுக்கு ஆதார் எண் இணைந்த பயோமெட்ரிக் முறையை கொண்டு வருவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அன்னாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஆதார் அடையாளம் என்பது அரசின் மானியம், உதவி போன்ற திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆதார் சட்டம் பிரிவு 7ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆனால், அதற்கு மாறாக தமிழக அரசு பள்ளிகளில் வருகைப் பதிவிற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது என்றும் கூறியிருந்தார்.  இது தங்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும் என்பதால் பயோமெட்ரிக் முறையில் ஆதார் எண்ணை இணைக்கும் தமிழக அரசின்  உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும்  மனுவில் கோரியிருந்தார்.  இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த 4-ம் தேதி மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள் பொதுமான தேர்ச்சி விகிதம் காட்டாததால் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர் என அதிருப்தி தெரிவித்தனர். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட  நீதிபதிகள்  பயோமெட்ரிக் முறை விரைவில் செயல்படுத்த தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற ‘நீட்’ தேர்வு கட்டாயம் எழுதவேண்டும்.

இந்த தேர்வை இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்த தேர்வு மே 5 ல் நடைபெறவுள்ளது.  இதற்கான ஹால்டிக்கெட்டை www.nta.ac.in மற்றும் www.ntaneet.ac.in என்ற இணையதளங்களில் இன்று பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தாலும் , நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராகவே உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் மழலையர் மற்றும் தொடக்க பள்ளியின் 11ஆம் ஆண்டு விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மஹாவீர்  கலந்து கொண்டு வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மழலையர்கள் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.