Home Archive by category சினிமா (Page 10)

சினிமா

தமது கட்சியின் பெயர், கொள்கைகளை விரைவில் வெளியிடுவேன்; அரசியலில் தீண்டத்தகாதவர் யாரும் இல்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் நேற்று பேசியதாவது: விரைவில் என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் வெளியிடுவேன். சித்தாந்தங்களின் அடிப்படையின் பாஜக மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்.

என்னைப் பொறுத்தவரையில் மக்களுக்கு எது தேவையோ அதுவே என்னுடைய தேவை. ஆகையால் தமிழகத்தின் நலன் கருதி வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை.

எனக்கு அரசியலுக்கு வருகின்றன தைரியம் இருக்கிறது. எனக்கு எந்த ஒரு பயமும் இல்லை. தமிழக அரசியலில் நான் என்னை முன்னிறுத்தவில்லை. அதற்கு பதிலாக மாற்றத்தை முன்னிறுத்துகிறேன். மாற்றத்தை விரும்புகிறவர்கள் நிச்சயம் என்னை ஆதரிப்பார்கள். எந்த வகையிலான தீவிரவாதமானாலும் அதை நிச்சயம் ஆதரிக்கப் போவதில்லை என கூறினார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான அறம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, இமைக்கா நொடிகள் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் திடீரென சென்னை வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நயன்தாரா பிறந்தநாளுக்காக வடமாநிலத்தில் அனுராக் பறந்து வந்தது கோலிவுட்டில் பெருமையாக பேசப்பட்டு வருகிறது.

‘பத்மாவதி’ இந்தி திரைப்படத்தில்  ராஜபுத்ர சமூகத்தை சேர்ந்த 13-வது நூற்றாண்டின் சித்தூர்கர் ராணி பத்மாவதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அந்த படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்த படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரிடம் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேசினார். இதுகுறித்து சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பத்மாவதி’ இந்தி படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் வெறுப்பு கலாசாரத்தை நான் கண்டிக்கிறேன். தீபிகா படுகோனே உலக அளவில் புகழ் பெற்ற நடிகை. அவருக்கு ஆதரவாக கர்நாடக அரசு நிற்கிறது. நான் அரியானா முதல்-மந்திரியிடம் பேசினேன்.

அவருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன். தீபிகா படுகோனே கர்நாடகத்தை சேர்ந்தவர். அவர் கர்நாடகம் வரும்போது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், தமிழகத்திற்காக ரூ.75 லட்சம் நன்கொடை கொடுத்த விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று பட விழா ஒன்றில் நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி, இதுவரை வெளிவராத இந்த ரகசியத்தை வெளியிட்டார்.

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் ஆரம்பித்த நிதியுதவி செய்யும் டிரஸ்ட்டுக்கு பிரபாஸ் ரூ.75 லட்சம் கொடுத்ததாகவும், அந்த பணம் முழுவதும் கடலூர் அரசு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கொடுத்த பணம் முழுவதும் எங்கெங்கு எதற்காக செலவு செய்யப்பட்டது என்ற கணக்கும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.