Home Archive by category சினிமா (Page 2)

சினிமா


தமிழ்த் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்தவர் இயக்குநர் மகேந்திரன். ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மைல் கல்லாக விளங்கிய முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன்.

எவ்வித ஆரவாரமும் இன்றி எடுக்கப்பட்ட இவரது படங்கள் பெரும்பாலும் ஆகச்சிறந்த திரைப்படங்களாகவே இருந்தன.

தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மகேந்திரன், பேட்ட, நிமிர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் கடந்த வாரம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மகேந்திரனின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு மகேந்திரன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தேர்விகப்படுள்ளது

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு 6 வாரம் தடை விதித்து உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

சர்கார் படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே இக்காட்சிகள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருப்பதாக தேவராஜன் என்பவர் மாநகர காவல் ஆணையரகத்தில் புகாரளித்திருந்தார்.

இதையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. பின் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து சுதந்திரமிருந்தும், எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் தன் மீது வழக்குப்பதிவு செய்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, தணிக்கை பெற்ற படத்துக்கு வழக்குப் பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும் என்றும், அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்தனர்.

பின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான எஃப்.ஐ.ஆரில் மறு உத்தரவு வரும் வரை 6 வாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனக்கூறி ஆணை பிறப்பித்தனர்.

குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களைத் தமிழக அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகத் தமிழகச் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளருக்குத் தமிழக அரசு மானியம் வழங்கி வருவதாகவும், ஒரு படத்துக்கு 7 இலட்ச ரூபாய் வீதம் ஒரே நேரத்தில் 149 திரைப்படங்களுக்கு 10 கோடியே 43 இலட்ச ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்

ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்ணியில் சமீபத்தில் வெளியான படம் சர்கார். இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, முருகதாஸ் மீதான முதல் தகவலறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என  காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், பிரபலமானவர்கள் செய்தால் அது தப்பு, பிரபலமில்லாதவர்கள் செய்தால் அது தப்பில்லையா? என புகார்தாரரிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும் என்று தெளிவுப் பாதையின் நீச தூரம் என்ற திரைப்படத்தின் குழு வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரைப்படக்குழுவினர், 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறை செல்வராஜ் கொலை கொலை செய்யப்பட்டது மற்றும் அதனை தொடந்து நடைபெற்றகலவரத்தில் 18 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றிய கதை தான் தெளிவுப் பாதையின் நீச தூரம் எனவும் இது வெளியிடப்பட்டால் சமூக அமைதி கெடும் என கூறி தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர். கேளிக்கை மற்றும் சர்கார் போன்ற மேலோட்டமாக அரசியல் பேசும் படங்களை தணிக்கை செய்யும் அதே குழுக்கள் தீவிர கள அரசியல் பேசும் திரைப்படங்களை தணிக்கை செய்யக் கூடாது எனவும் இதற்கென தனிக்குழுவை  அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தனர்

 

 

தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே, தமிழில் `பாம்பே’ படத்தில் அறிமுகமாகி, `காதலர் தினம்’ படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே, தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக நியூயார்க்கில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சோனாலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரை சந்தித்து சில பரிசோதனைகளை எடுத்துக் கொண்டேன். பரிசோதனையின் முடிவில் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததது. அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு உறவினர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். புற்றுநோயுடன் போராடி விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். சோனாலி பிந்த்ரே நலமுடன் வாழ பிரார்த்தனை செய்து கொள்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீர்ரும்,முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியார் மற்றும் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-29

தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ராமசாமி படையாச்சியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16 ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.

இதேபோல், கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் பால்கே ஆகிய விருதுகளை பெற்று நடிகர் திகலம் என்று மக்களால் போற்றப்பட்ட சிவாஜி கணேசனின் பிறந்த தினமான அக்டோபர் 1ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கூறினார்.

ஐ.நா.சபையின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீ, ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார்.

ஈராக் : ஜூன்-18

ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள், 33 ஆயிரம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை ஐ.நா.சபையின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீ நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சிரியா உள்நாட்டு போரால் பெண்களும் குழந்தைகளும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் கூறியதை கவனமாக கேட்ட ஏஞ்சலினா ஜோலி, முகாமில் இருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள், வர்த்தக வசதிகளை ஏற்படுத்த ஐநா.சபையின் மனித உரிமை ஆணையம் நிதி உதவியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சேலம் பசுமைவழிச் சாலைக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். 

 சென்னை : ஜூன்-17

சேலம் மாவட்டத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற நடிகர் மன்சூர் அலிகான், சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைந்தால், எட்டு பேரின் கையை வெட்டுவேன் எனப் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வன்முறையைத் தூண்டும் விதமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாக, அவர் மீது சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, இன்று அதிகாலையில், சென்னை சூளைமேட்டில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்ற தீவட்டிபட்டி காவல்துறையினர், அவரை கைது செய்து சேலத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ரஜினி நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படம் இன்று வெளியானது. இரவு முழுவதும் காத்திருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சென்னை : ஜூன்-07

நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள காலா திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சென்னையில் ரோஹினி, பரங்கிமலை ஜோதி மற்றும் ஆலந்தூர் ரெமி ஆகிய திரையரங்குகளில் காலா திரைப்படம் அதிகாலை நான்கு மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலை 3 மணிக்கே திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும், ரசிகர்கள் மேளம் தாளம் முழங்க, ஆடிபாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதேபோல், திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 96 திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் நல்ல வருவாயை ஈட்டித்தரும் என்று நம்பிக்கை உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் உள்ள எந்த திரையரங்குகளிலும் படம் வெளியாகவில்லை. காலை 10:30 மணிக்கு டிக்கெட் வழங்க வேண்டிய திரையரங்குகளில் தற்போது வரை வழங்கபடவில்லை. காலா படத்தினை வெளியிடக் கூடாது என்று கன்னட அமைப்புகள் திரையரங்குகள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.