Home Archive by category சினிமா (Page 9)

சினிமா

நடிகர் அரவிந்த் சாமியின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்கக் கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : ஏப்ரல்-04

வரும் நிதியாண்டுக்கான அட்வான்ஸ் வருமான வரி 96 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை செலுத்தவில்லை எனக் கூறி, அரவிந்த் சாமியின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க, வங்கி நிர்வாகத்திற்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே 30 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாகவும், வருமான வரித் துறையின் நோட்டீஸ் சட்டவிரோதமானது எனவும் அரவிந்த் சாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, அட்வான்ஸ் வருமானவரி செலுத்திய விண்ணப்ப படிவத்தை பரிசீலிக்கும் வரை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என வருமானவரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் அனுஷ்கா, முதல் முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மம்முட்டி நடிக்கவுள்ள ஒரு மலையாளப் படத்தில் அவருக்கு மனைவியாக நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளார்.

ஏப்ரல்-02

அனுஷ்கா எண்ணிக்கையில் குறைவான படங்களில் நடித்தாலும் கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருகிறார். பாகுபலி’ படத்துக்குப் பின் அனுஷ்கா நடித்த பாகமதி படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழ், தெலுங்கு சினிமாவுலகில் நடித்துவந்த அனுஷ்கா அடுத்ததாக மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை இயக்குநர் சரத் சந்திப் இயக்கவுள்ளார். மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்பது அனுஷ்காவின் நீண்ட கால ஆசை, இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது என்பது, குறிப்பிடத்தக்கது…

நரகாசுரன் படத்துக்கு பணம் வாங்கி அதை துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்கு முதலீடு செய்யவில்லை என்று கவுதம் மேனன் கூறியிருப்பதில் உண்மை இல்லை என இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.

மார்ச்-02

அரவிந்தசாமி, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நரகாசுரன். இந்த படத்தை தயாரித்த கவுதம் மேனன், இயக்குநர் கார்த்திக் நரேன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
படக்குழுவினரை கவுதம் மேனன் குப்பைபோல் நடத்தியதாகவும் நரகாசுரன் படத்துக்கு வாங்கிய தொகையை வேறு படங்களுக்கு செலவிட்டு, பட வேலைகளை முடக்கியதாகவும் கார்த்திக் நரேன் குற்றம் சாட்டினார். இதனை கவுதம் மேனன் மறுத்தார். படத்தில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறேன். சிலர் பேச்சை கேட்டு கார்த்திக் நரேனுக்கு கோபம் வந்துள்ளது என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கவுதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
“கவுதம் மேனன் சினிமா துறையில் மூத்தவர். அவர் தயாரிக்கும் துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களின் பட்ஜெட் நரகாசுரனை விட பல மடங்கு அதிகம் என்பது உண்மைதான். நரகாசுரன் படத்துக்கு பணம் வாங்கி அதை துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்கு முதலீடு செய்யவில்லை என்று கவுதம் மேனன் கூறியிருப்பதில் உண்மை இல்லை. என்னிடம் ஆதாரம் இருக்கிறது. எனது படத்தை காட்டி அவர் யாரிடம் பணம் வாங்கினார் என்பது எனக்கு தெரியும். கவுதம் மேனனுக்கு பணம் கொடுத்தவர் கோர்ட்டில் நரகாசுரன் படத்துக்கு எதிராக தடை வாங்கி விட்டார். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை அவர் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு கார்த்திக் நரேன் கூறினார்.

 

 

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்னேகர்  இருதய வால்வு அறுவைசிகிச்சைக்குப் பின் நினைவு மீண்டு கண்களைத் திறந்தவுடன் முதல் வார்த்தையாக ‘ஐ ஆம் பேக்’ என கூறியிருக்கிறார்.

ஏப்ரல்-2

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்னேகர். ‘டெர்மினேட்டர்’, ‘பிரிடேட்டர்’ படங்களின் வரிசைகள் மூலம் உலக புகழ்பெற்ற இவர், இரண்டு முறை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக பதவி வகித்துள்ளார். அர்னால்டுக்கு இருதய வால்வில் சிறு பிரச்னை இருந்து வந்தது. இதற்காக அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று ஆபரேஷன் நடந்தது. ஏற்கெனவே, கடந்த 1997-ம் ஆண்டு இவருக்கு இதய தமனி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருபது ஆண்டுகளாக நலமாக இருந்த அவர், திடீரென மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அவருக்கு ஆபத்து எதுவும் இல்லையென்றும், இருபது ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்ட தமனியை மீண்டும் மாற்றும் சிகிச்சை தான் என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் டேனியல் கூறினார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பின் நினைவு வந்து எழுந்த அர்னால்டு உச்சரித்த முதல் வார்த்தைகளே, ‘ஐ அம் பேக் (I am back)’ என்ற அவரது ட்ரேட்மார்க் வசனம் தானாம்.

ட்விட்டரில் நடிகை ஸ்ருதி ஹாஸனை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 7 மில்லியனை தொட்டுள்ளது. இதன்மூலம், ரஜினி, கமலை விட ட்விட்டரில் நடிகை ஸ்ருதி ஹாசன் அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.

ஏப்ரல் – 2

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.  தான் நடித்து வரும் படங்களின் புகைப்படங்கள், மற்றும் கருத்துக்களை பகிர்ந்து வருவார். ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளிப்பார். தற்போது இவரை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை தொட்டிருக்கிறது.
நடிகர்களில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார். இவரை 7.25 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ரஜினி 4.61, கமல் 4.63 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள்.

பத்மாவதி படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் நாளை மாலை 15 நிமிடம் படப்பிடிப்புகளை நிறுத்த திரையுலகினர் தீர்மானித்துள்ளனர்.

சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோனே மற்றும் இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கொடும்பாவிகளை எரித்த ஒரு அமைப்பினர், தீபிகாவை உயிருடன் எரித்து கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், பத்மாவதி படத்தை ஆதரிக்கும் வகையிலும், இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் நாளை மாலை 4.15 மணியில் இருந்து 4.30 மணிவரை 15 நிமிடம் படப்பிடிப்புகளை நிறுத்திவைக்க இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த முடிவுக்கு திரையுலகை சேர்ந்த 19 துணை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஒளிப்பதிவாளர்கள், எழுத்தாளர்கள், ஒப்பனை கலைஞர்கள். டப்பிங் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடகர்கள் சங்கம், சண்டைக் காட்சி இயக்குநர்கள் சங்கம் போன்ற துணை அமைப்பை சேர்ந்த சுமார் 700 பேர் இந்த 15 நிமிட வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தமது கட்சியின் பெயர், கொள்கைகளை விரைவில் வெளியிடுவேன்; அரசியலில் தீண்டத்தகாதவர் யாரும் இல்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் நேற்று பேசியதாவது: விரைவில் என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் வெளியிடுவேன். சித்தாந்தங்களின் அடிப்படையின் பாஜக மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்.

என்னைப் பொறுத்தவரையில் மக்களுக்கு எது தேவையோ அதுவே என்னுடைய தேவை. ஆகையால் தமிழகத்தின் நலன் கருதி வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை.

எனக்கு அரசியலுக்கு வருகின்றன தைரியம் இருக்கிறது. எனக்கு எந்த ஒரு பயமும் இல்லை. தமிழக அரசியலில் நான் என்னை முன்னிறுத்தவில்லை. அதற்கு பதிலாக மாற்றத்தை முன்னிறுத்துகிறேன். மாற்றத்தை விரும்புகிறவர்கள் நிச்சயம் என்னை ஆதரிப்பார்கள். எந்த வகையிலான தீவிரவாதமானாலும் அதை நிச்சயம் ஆதரிக்கப் போவதில்லை என கூறினார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான அறம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, இமைக்கா நொடிகள் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் திடீரென சென்னை வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நயன்தாரா பிறந்தநாளுக்காக வடமாநிலத்தில் அனுராக் பறந்து வந்தது கோலிவுட்டில் பெருமையாக பேசப்பட்டு வருகிறது.

‘பத்மாவதி’ இந்தி திரைப்படத்தில்  ராஜபுத்ர சமூகத்தை சேர்ந்த 13-வது நூற்றாண்டின் சித்தூர்கர் ராணி பத்மாவதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அந்த படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்த படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரிடம் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேசினார். இதுகுறித்து சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பத்மாவதி’ இந்தி படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் வெறுப்பு கலாசாரத்தை நான் கண்டிக்கிறேன். தீபிகா படுகோனே உலக அளவில் புகழ் பெற்ற நடிகை. அவருக்கு ஆதரவாக கர்நாடக அரசு நிற்கிறது. நான் அரியானா முதல்-மந்திரியிடம் பேசினேன்.

அவருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன். தீபிகா படுகோனே கர்நாடகத்தை சேர்ந்தவர். அவர் கர்நாடகம் வரும்போது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், தமிழகத்திற்காக ரூ.75 லட்சம் நன்கொடை கொடுத்த விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று பட விழா ஒன்றில் நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி, இதுவரை வெளிவராத இந்த ரகசியத்தை வெளியிட்டார்.

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் ஆரம்பித்த நிதியுதவி செய்யும் டிரஸ்ட்டுக்கு பிரபாஸ் ரூ.75 லட்சம் கொடுத்ததாகவும், அந்த பணம் முழுவதும் கடலூர் அரசு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கொடுத்த பணம் முழுவதும் எங்கெங்கு எதற்காக செலவு செய்யப்பட்டது என்ற கணக்கும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.