Home Archive by category தேசம் (Page 3)

தேசம்

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலில் சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழையால் சட்லஜ் நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் நிலையில், சிம்லா அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஷாக்ரா, பாலடி, பிண்ட்லா மற்றும் ஜெட்வி உள்ளிட்ட கிராமங்கள் மற்ற இடங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. லகால் ஸ்பிதி மாவட்டத்தில், வெள்ளத்தில் சாலை அடித்து செல்லப்பட்ட நிலையில், அங்கு வெளிநாட்டினர் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகள் 400க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டுள்ளனர். அவர்களில் 150 பயணிகள் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் சேதமடைந்துள்ள புன்ட்டார் – மணிக்கரான் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் மணாலி – குலு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், கனமழையால் சாலையின் ஒரு பகுதி அரித்து செல்லப்பட்ட நிலையில், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹமிபூர் மாவட்டத்தில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 66 வயதான அருண்ஜேட்லி, தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ந் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லி  உடல்நிலை குறித்து விசாரித்தனர். தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லி உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

தேசம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக கார், இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. முக்கியமாக வாகனங்களின் விற்பனை குறைவால், உற்பத்தியும் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் தற்காலிகமாக தங்கள் ஆலைகளை மூடுவது, பணியாளர்களை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஓரிரு நாளில் நிகழ்ந்ததல்ல என்றார். இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவால் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளதாகவும், அடுத்து வரும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் அவர் கூறினார்.
கட்டுமானத் துறையும் முடங்கிவிட்ட நிலையில், பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவுகளைச் சந்தித்து, நாட்டின் நிதிப்பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது என்றார் அவர். நாட்டில் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறுவதில் உண்மையில்லை என்று குறிப்பிட்ட அவர், உண்மையில் தேசம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது என்றார். நாட்டில் நிதித்துறை நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். இவை அனைத்துக்கும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் எனவும், ஆனால், பொருளாதார விவகாரத்தில் தனது தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசு வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி வருவதாகவும் அபிஷேக் சிங்வி குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான முதல் ஆட்சியையும், தற்போதைய ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையில் செல்வதை தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 66 வயதான அருண்ஜேட்லி, தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ந் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து விசாரித்தனர். தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லி உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

அயோத்தியில் கோவிலை இடித்து தான் மசூதி கட்டப்பட்டதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பான ஆதாரங்களை வழங்குமாறு, மனுதாரர்களில் ஒன்றான ராம் லல்லா விராஜ்மான் என்ற அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா விராஜ்மான் அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது.இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால், இந்த வழக்கை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உச்சநீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, அயோத்தியில் கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அதற்கான ஆதாரங்களை வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதற்கு பதிலளித்த ராம் லல்லா விராஜ்மான் அமைப்பின் வழக்கறிஞர், கடந்த 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர், சர்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்ததாக கூறினார்.

மேலும், அவரது ஆய்வில் இந்து தெய்வங்களின் உருவங்கள் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பான சில புகைப்படங்களையும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

ஜம்மு காஷ்மீரில் கைபேசி இணையதள சேவை மீண்டும் துவங்கியது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்து,  காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்முகாஷ்மீர் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வதந்திகள் பரவாமல் தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜம்முவில் கட்டுப்பாடுகள் வேகமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜம்மு, சம்பா, கதுவா, உதாம்பூர் ஆகிய இடங்களில் 2-ஜி மொபைல் இணையதள சேவைமீண்டும் வழங்கப்பட்டுள்ளது. நிலைமையை ஆய்வு செய்த பின், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக கதிர் நம்பூதிரி தேர்வாகியுள்ளார்.

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது.இதையடுத்து இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது.

அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து கணபதி ஹோமம் நடத்தினார்.

காலை 7.30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர், புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இதில் சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுறம் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆவணி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு இருப்பதால், ஐயப்பனை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்

ஜம்மு காஷ்மீருக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும் ? என்று மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மனுத்தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு , காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்க விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும் ? உங்கள் கோரிக்கை என்ன ? என்று வழக்கு தொடர்ந்த எம்.எல்.ஷர்மாவிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரை மணி நேரம் படித்து பார்த்தும் உங்கள் மனுவை புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள நீதிபதிகள், மனுவில் உள்ள அனைத்து பிழைகளையும் சரி செய்து மீண்டும் தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

 

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு அமைப்பு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், Armed Conflict Location and Event Data என்ற புலனாய்வு அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

அதில், சிரியா மற்றும் ஈராக் நாடுகளில், செயல்பட்டு வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, சர்வதேச அழுத்தம் காரணமாக அங்கு இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிய நாடுகளில் தீவிரமாக செயல்பட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில், ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, இந்தியா, ஆஃப்கானிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, மாலி, லிபியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ். அமைப்பு வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவசமாக வை-பை வசதியுடன் தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

நாட்டின் 73ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி, காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் உரையாற்றிய நாராயணசாமி, தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவசமாக வை-பை வசதியுடன் தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பைட்

முதலமைச்சர் உரையைத் தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர்படை, பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதே போல் புதுச்சேரியில் கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்திற்கு சென்று தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கொண்டாடினார்கள்.இந்த காட்சிகள் ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.