Home Archive by category வணிகம்

வணிகம்

தங்கம் சவரன் ஒன்றுக்கு 24 ரூபாய் அதிகரித்துள்ளது

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 583 ரூபாய்க்கும், ஒரு சவரன் 28 ஆயிரத்து  664 ரூபாய்க்கும் விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 50 ரூபாய் 10 காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 50  ஆயிரத்து 100ரூபாய்க்கும் விற்பனையானது.

 

 

பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த ஆண்டு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

திருப்பூரில் 2018-2019 ஆம் ஆண்டில் மட்டும் பின்னலாடை ஏற்றுமதியின் மூலம் 26 ஆயிரம் கோடி ருபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது. தற்போதைய பொருளாதார மந்த நிலை காரணமாக 24 மணி நேரமும் செயல்பட்டு கொண்டிருந்த பனியன் நிறுவனங்கள் தற்போது 12 மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது. திருப்பூரில் சமீப நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை சுமார் 60 சதிவிகிதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஒரு பனியன் உருவாக மொத்தம் 7 நிலைகளை கடந்து உருவாக வேண்டும் என்ற நிலையில், ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனியே ஜி.எஸ்.டி விதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். பின்னலாடை ஏற்றுமதிகள் இல்லாதபோது கை கொடுக்க வேண்டிய உள்நாட்டு வியாபாரம், பொருளாதாரா மந்த நிலையால் அதுவும் செயலற்ற நிலையிலேயே உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். தீபாவளி நெருங்கி வருகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் பின்னலாடை நிறுவனங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிகின்றனர்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் 3 ஆயிரத்து 625 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 965 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ 50 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 1500 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் ஒரு கிராம் 2

ரூபாய் 20 காசுகள் குறைந்து, கிராம் வெள்ளி 48 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 48 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்று சவரனுக்கு 56 ரூபாய்குறைந்துள்ளது.

சென்னையில் ஒருகிராம் தங்கம் 3 ஆயிரத்து 607 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 28 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கு கீழாக குறைந்துள்ளது.

தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 4-ஆம் தேதி காலை ஒரு சவரன் 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பின் தங்கத்தின் விலை மெல்ல குறையத் தொடங்கியது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 16 ரூபாய் குறைந்து,  3 ஆயிரத்து 618 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 40 காசு உயர்ந்து 50 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆயிரத்து 176 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 112 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  மூவாயிரத்து 645 ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு 29  ஆயிரத்து  160  ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 50 ரூபாய் 50காசுகளுக்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 96 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  மூவாயிரத்து 659 ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு 29  ஆயிரத்து  272  ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 51 ரூபாய்க்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 51 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

 

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 8.25 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாகக் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் ரெப்போ வட்டியைக் ரிசர்வ் வங்கி குறைத்தது. ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது, வணிக வங்கிகளுக்கு ஏற்படும் செலவினங்களும் குறையும். அந்தப் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். ஆனால், பெரும்பாலான வங்கிகள் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அடிப்படை வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது, ஸ்டேட் வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 8.25 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகனக் கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி குறையும். அதேநேரம், எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம், 10 முதல் 25 பைசா வரையில் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.

உணவு டெலிவரி வர்த்தகத்தில், இந்தியாவில் தற்போது முன்னணியில் உள்ள பல நிறுவனங்களுக்குப் போட்டியாக அமேசான் நிறுவனம் விரைவில் களமிறங்க உள்ளது.

தங்களுக்குப் பிடித்த உணவகத்தில் இருந்து, விருப்பமான உணவை மொபைல் ஆப்கள் மூலம் வாங்கும் வழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த சேவையில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அடுத்த மாதம் இந்தியாவின் உணவு டெலிவரி வர்த்தகத்தில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்கனவே முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கவும், மக்கள் பல புதிய சலுகைகளைப் பெறவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில், உணவு டெலிவரி வர்த்தகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டே அமேசான் நிறுவனம் கால்பதித்தது. ஆனால், இலக்கை அடைய முடியாததால், அந்த வர்த்தகப் பிரிவு கடந்த ஜூன் மாதத்தில் மூடப்பட்டது குறிப்பிட்த்தக்கது.