Home Archive by category வணிகம் (Page 2)

வணிகம்

தங்கம் வெள்ளி விலை நிலவரம்

 

இன்றைய தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 612 ரூபாய்க்கும்,   ஒரு சவரன் 28 ஆயிரத்து  896  ரூபாய்க்கும் விற்பனையானது.

சில்லரை  வெள்ளியின் விலை ஒரு

கிராம் 48 ரூபாய் 40 காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 48  ஆயிரத்து  400  ரூபாய்க்கும்  விற்பனையானது

22 கேரட் ஆபணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 618 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனையானது.

இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து 48 ரூபாய் 70 காசுகளுக்கும் கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து 48 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உலக  வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய  பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா  ஆகியவை இனியும் வளரும் நாடுகள் அல்ல என்றும் அதனை கூறிக்கொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளும், வளரும் நாடுகள் எனக்கூறிக்கொண்டு, சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இந்த இரண்டு நாடுகளும் உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 3 ஆயிரத்து 576 ரூபாய்க்கும், சவரன் 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 60 காசுகள் குறைந்து 47 ரூபாய் 40 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 34 டாலர் குறைந்து ஆயிரத்து 498 டாலராக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 29 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மீன்தூள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விதித்துள்ள 5% GST வரியை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு உரிமையாளர், தொழிலாளர்கள், மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் அந்தோணியப்பா தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அகில இந்திய மீன்தூள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு தங்களுடைய முழுமையான ஆதரவை தெரிவிப்பதாக கூறினார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மீன்தூள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விதித்துள்ள 5% GST வரியை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சில்லரை வியாபாரிகள் ஓய்வூதியம் பதிவு செய்வது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒன்றரைக் கோடி ரூபாக்குள் வணிகம் செய்யும் சில்லரை வியாபாரிகள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் ஓய்யூதிய திட்டத்துக்கு தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள வியாபாரிகள் இணைந்து கொள்ளலாம் என்றும், மாதாந்திர சந்தா தொகை, வயதிற்கேற்றாற்போல் 55 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் 60 வயதை அடைந்தவுடன் குறைந்தபட்சமாக மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 9-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானின் என் இ சி நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார்கள் வரும் 2030ம் ஆண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் பொருட்டு ஜப்பானின் பிரபல நிறுவனமான என்.இ.சி ஆட்டோமொபைல் நிறுவனம் பறக்கும்காரைத் தயாரித்து அதனை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தது.

4 புரப்பல்லர்களுடன் கட்டியமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் 4 பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையிலும் ஓடுதளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும்.

முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்த பின்னர் வரும் 2030ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என என் இ ஈஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு  216 ரூபாய் உயர்ந்து  27,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்து 3,ஆயிரத்து 487 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து வெள்ளி கிராமுக்கு 10 காசு குறைந்து 45 ரூபாய்70 காசுகளுக்கு  விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 44 ரூபாய் அதிகரித்து  3 ஆயிரத்து 460 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் 27  ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 45 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மூன்றே நாளில் 50 டாலர் அதிகரித்து 1452 டாலரை எட்டியுள்ளது குறிப்டத்தக்கது.

வரலாற்றில் முதல் முறையாக, சென்னையில் ஆபரணத்தங்கம் சவரன் 27 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. சில நாட்களுக்கு முன்பு சவரன் 26 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று சவரனுக்கு 264 ரூபாய்உயர்ந்து, ஒரு சவரன் 27 ஆயிரத்து 328- ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 416 ஆக உள்ளது. ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் 3 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 848 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வால் பெண் பிள்ளைகள் வைத்திருப்போர் கலக்கத்தில் உள்ளனர். வெள்ளி ஒரு கிலோ ரூ. 44 ஆயிரத்து 500-க்கும், ஒரு கிராம் ரூ. 44.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு அமெரிக்கா புதிதாக 10 சதவீதம் வரிவிதித்து இருக்கிறது. இதேபோல் மத்திய வங்கி கூட்டமைப்பு கூட்டத்தில் வட்டி வீதத்தை 0.25சதவீதம் குறைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் டாலர் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதுவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயரக் காரணம் என்றும், இனிவரக்கூடிய நாட்களிலும் இதேநிலை நீடிக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.