Home Archive by category வணிகம் (Page 3)

வணிகம்

உலக  பொருளாதார வீழ்ச்சியே தங்கம் விலை அதிகரித்தற்கான காரணம் என்று நகைக் கடை உரிமையைளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். அமெரிக்கா டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்ததும்,  விலை அதிகரிக்க காரணம் என்று கூறும் அவர், வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கிறார்.

மிகவும் சிக்கலான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா செல்வதாக கே.பி.எம்.ஜி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கே.பி.எம்.ஜி. நிறுவனம், உலக அளவில் மிக முக்கியமான தணிக்கை நிறுவனமாகும். உலக அளவில் நிதி மற்றும் வர்த்தக ஆலோசனை வழங்கும் கே.பி.எம்.ஜி. நிறுவனம், இந்தியா பற்றி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், 30 ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்வதாக கூறப்பட்டுள்ளது. வேகமாக வளரும் நாடாக கடந்த ஆண்டு வரை இருந்த இந்தியா, தற்போது அந்த இடத்தை இழந்து விட்டதாகவும், இந்தியாவில் விற்பனை குறைந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சரியும் பொருளாதாரத்தை சீராக்க இந்திய அரசு அவசர முயற்சிகளை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள கே.பி.எம்.ஜி., பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி உதவி தருவதாக இந்திய அரசு அறிவித்துள்ளதை நினைவு கூர்ந்துள்ளது. அரசின் சலுகை அறிவிப்புகள், சரிந்து வரும் இந்திய பொருளாதாரத்தை தடுக்க போதுமானதல்ல என கருத்து தெரிவித்துள்ள அந்த நிறுவனம், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 744 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 16 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 718 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 40 காசு உயர்ந்து 52 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து  உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 26 ஆயிரம் ரூபாயை தாண்டிய ஒரு சவரன் தங்கம், ஜூலையில் 27 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. நான்கே நாட்களில் 28 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது. தற்போது 30 ஆயிரத்தை நெருங்கும் வகையில் உள்ளது. இதே நிலை நீடித்தால், இந்த ஆண்டு இறுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயைத் தொடும் என்று கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 72 ரூபாய்  அதிகரித்துள்ளது

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 691    ரூபாய்க்கும், ஒரு சவரன் 29 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 51 ரூபாய் 60 காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 51 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 72 ரூபாய்  அதிகரித்துள்ளது

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 691    ரூபாய்க்கும், ஒரு சவரன் 29 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 51 ரூபாய் 60 காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 51 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 240  ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 682 ரூபாய்க்கும், ஒரு சவரன் 29 ஆயிரத்து  456  ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் 52  ரூபாய்க்கும்,  கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 52 ஆயிரத்துக்கும்  விற்கப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 263  புள்ளி எட்டு ஆறு புள்ளிகள் குறைந்து  37  ஆயிரத்து  332 ஆக முடிவடைந்தது.

தேசியபங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 74  புள்ளி  ஒன்பது ஐந்து புள்ளிகள் குறைந்து 11  ஆயிரத்து  23  ஆக  நிறைவடைந்தது.

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 240  ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 682 ரூபாய்க்கும், ஒரு சவரன் 29 ஆயிரத்து  456  ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் 52  ரூபாய்க்கும்,  கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 52 ஆயிரத்துக்கும்  விற்கப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 263  புள்ளி எட்டு ஆறு புள்ளிகள் குறைந்து  37  ஆயிரத்து  332 ஆக முடிவடைந்தது.

தேசியபங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 74  புள்ளி  ஒன்பது ஐந்து புள்ளிகள் குறைந்து 11  ஆயிரத்து  23  ஆக  நிறைவடைந்தது.

தங்கத்தில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் விலை ஏறத் தொடங்கியது. கடந்த 13ம்  தேதி வரை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால் நகை வாங்குவோர் மத்தியில் கடும்  அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 24ம்தேதி  சவரன் விலை 29 ஆயிரத்து 440 ரூபாயாக உச்சம் தொட்டது.  இப்படி தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் விலை நேற்று காலை 30 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. ஒரு சவரன் 29 ஆயிரத்து 816-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சவரன் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 336 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஒரு சவரன் 184 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 23 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 689 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து 51,700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனிடையே தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 2 மாதங்களாக நகைக்கடைகளில் 75 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. அத்துடன், புதிதாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ஆர்.பி.ஐ அறிமுகப்படுத்தியது. இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 2000 ரூபாய் பணப்புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 2017-18 நிதியாண்டின் போது 6 லட்சத்து 72 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு இருந்த இதன் எண்ணிக்கை, 2018-19 ம் ஆண்டில் 6 லட்சத்து 58 ஆயிரத்து 200 ஆக குறைந்துள்ளது. சுமார் 14 ஆயிரத்து 400 கோடி அளவிற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் மதி்ப்பு 2019-ம் ஆண்டு நிதியாண்டில் 39 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே நடப்பு நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த ஆர்.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 151 மில்லியன் அளவில் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை 47 மில்லியன் அளவாக ஆர்.பி.ஐ. குறைத்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரன் 30 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, தேவை, பங்குசந்தை மாற்றங்கள் ஆகியவற்றால் உள்ளூரில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால், தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் நேற்று திடீரென தங்கத்தின் விலையில் பெரிய அளவில் உயர்வு காணப்பட்டது. இதனால், சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 704 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் 3 ஆயிரத்து 713 ரூபாய்க்கு விற்கப்பட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்திருப்பதால், பெரும்பாலான நகைக் கடைகள் கூட்டமின்றி காணப்படுகின்றன.

சில வாரங்களில் தங்கம் விலை ஒரு பவுன் 30 ஆயிரம் ரூபாயை ருங்கும் என நகை கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 816 ரூபாய் என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 727 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.