Home Archive by category வானிலை

வானிலை

தமிழகத்தில்  பெரும்பாலான  மாவட்டங்களில்,  ஓரிரு  இடங்களில்,   மிதமான  மழைக்கு   வாய்ப்புள்ளதாக  சென்னை  வானிலை  ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மாலையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தின்  14  மாவட்டங்களில்  கனமழைக்கு  வாய்ப்பு  இருப்பதாக  சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல  மேலடுக்கு   சுழற்சி  மற்றும்   வெப்பச்  சலனம்  காரணமாக  தமிழகம்  மற்றும்    புதுவையில்  பெரும்பாலான  மாவட்டங்களில்  மிதமான  மழை  பெய்யக்  கூடும்  என்று  வானிலை   மையம்  கூறியுள்ளது.

வேலூர்,  தருமபுரி,   கிருஷ்ணகிரி ,  ஈரோடு,   கோயம்புத்தூர்,  நீலகிரி,   தேனி,  திண்டுக்கல், திருவண்ணாமலை,   கடலூர்,   விழுப்புரம்,  நாகப்பட்டினம்,  திருவாரூர்,  தஞ்சை   மாவட்டங்களிலும்,   புதுவை   மற்றும்   காரைக்காலிலும்,  ஓரிரு  இடங்களில்  கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்   மேற்கு  வங்கக்   கடல் சீற்றத்துடன்  காணப்படுவதாலும்,  மணிக்கு  45  முதல்  50  கிலோ  மீட்டர்  வேகத்தில்  காற்று  வீசக்  கூடும்  என்பதாலும்,  மீனவர்கள்   மீன்பிடிக்கச்  செல்ல     வேண்டாம்  என எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  வானம்  மேகமூட்டத்துடன்  காணப்படும்  என்றும்,  மாலை  அல்லது   இரவு  நேரங்களில்  லேசானது  முதல்   மிதமான மழை பெய்யக் கூடும் என்றும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ,ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மற்றும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தலா 10 சென்டி மீட்டர் மழையும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. தென் மேற்கு வங்கக் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும், மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதாலும், மீனவர்கள் அந்தப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், சென்னை நாகை இடையே 3 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தில் காற்றுச் சங்கமம் நிலவுவதாகக் கூறினார். இதன் காரணமாக வடதமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறிய அவர், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறினார். ஜூன் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், சென்னையில் இயல்பை விட 5 சென்டிமீட்டர் அதிகமாக மழை பெய்துள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே இதற்குக் காரணம் என வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று அவர்கள் கணித்துள்ளனர். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மழையை பொறுத்தவரை வட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாகவும், தென் தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்புவியரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றின் சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில்பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

என தெரிவித்தார்.  குறிப்பாக வேலூர் , திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ,சேலம் நாகை, புதுக்கோட்டை மற்றும்  அரியலூர் மாவட்டங்களில் ஒரு சிலஇடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், நீலகிரி,கோவை, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், தெற்கு மற்றும் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40-ல் இருந்து 50கிலோ மீட்டர்  வேகத்தில் காற்று  வீசுவதால், குமரிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீனவர்களை அவர் எச்சரித்தார். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார் அவர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குனர் விஜயன் தெரிவித்துள்ளார்.

வட மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குனர் விஜயன் தெரிவித்தார். நீலகிரி மற்றும் கோவையில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்த அவர்,  கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 15 சென்டி மீட்டர் , கோவை மாவட்டம் வால்பாறையில் 14 சென்டி மீட்டர் ., மழை பதிவாகியுள்ளதாக கூறினார்..

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். மத்திய மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதியில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதால் அப்பகுதிக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் விஜயன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான லட்சுமிபுரம், தேவதானப்பட்டி, கும்பக்கரை, சோத்துப்பாறை, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாகமழை பெய்தது.

நாகப்பட்டினத்தில் சில தினங்களாக வெயில் வாட்டிய நிலையில் மாலை முதல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

இதனிடையே, வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், தடாகம் , மலுமிச்சம்பட்டி, துடியலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கோவை மாநகர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து சாலைகளில் பாய்வதால்  பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலை சார்ந்த பகுதிகள் ரம்மியமாக காட்சி தருகின்றன. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய மூன்று தாலுகாக்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக இரும்பு பாலம் என்ற இடத்தில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மூன்று தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.