Home Archive by category விளையாட்டு (Page 2)

விளையாட்டு

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் ஸ்கேட்டிங் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. டவுன்ஹில் ஸ்கேட்டிங் என்று அழைக்கப்படும் இப்போட்டி 500 மீட்டர் நீளமுள்ளபாதையில் நடைபெற்றது.

ஏற்ற இறக்கங்கள் உள்ள இப்பாதையில் ரஷ்யா, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஸ்கேட்டிங் போட்டியில் ரஷ்ய அணியினர் அதிக பதங்கங்களை வென்று அசத்தினர்.பேட்ரியாட் பூங்காவில் நிரந்தமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் பாதையில், கோடைமற்றும் குளிர் காலங்களில் ஸ்கேட்டிங் போட்டி நடத்தப்படுகிறது.

இங்கு குளிர்காலத்தில் நடைபெறும் போட்டியின்போது பனிக்கட்டியின் மீது வீரர்கள் ஸ்கேட்டிங் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாய்ராஜ் – சிராக் ஜோடி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

பி.டபுள்யு.எப் சூப்பர் 500 அந்தஸ்து பேட்மின்டன் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற சாதனையை பதிவு செய்திருந்த சாய்ராஜ் , சிராக் ஜோடி, பரபரப்பான பைனலில் சீனாவின் லி ஜுன் ஹுயி -, லியு யூ சென் ஜோடியுடன் நேற்று மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் 21-19 என்ற கணக்கில் இந்திய ஜோடி முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றது.  2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சீன வீரர்கள், 21-18 என வென்று பதிலடி கொடுத்தனர். இதையடுத்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு ஜோடிகளும் சளைக்காமல் புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால், வெற்றி யாருக்கு என்பது கடைசி வரை இழுபறியாகவே நீடித்தது. எனினும், உறுதியுடன் விளையாடிய சாய்ராஜ் , சிராக் ஜோடி 21-19, 18-21, 21-18 என்ற செட் கணக்கில் 1 மணி, 2 நிமிடம் போராடி வென்று தங்கப் பதக்கத்தை வென்றது. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணப்பாறையில் மாநில அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் திருச்சி அணி முதலிடத்தை பெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.  இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டியின் இறுதியில் திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளி அணியும், மதுரை அமெரிக்கன் கல்லூரிமேல்நிலைப்பள்ளி அணியும் மோதின.  இதில் 2-0 என்ற கோல் கணக்கில் மதுரை அணியை வீழ்த்தி திருச்சி அணி முதலிடத்தை பிடித்தது. இந்தபோட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர்  பாலகிருஷ்ணன்  பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.

பட்னாவில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ்அணிகள் இன்று மோதுகின்றன.

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று இரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-உ.பி.யோத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் சேர்த்தன. இதனால் பலமுறை இரு அணிகளும் சமநிலை வகித்தன. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில், இரு அணிகளும் 11-11 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன. அடுத்த பாதியிலும் இரு அணிகளும் அடுத்தடுத்து புள்ளிகள் எடுத்தன. திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் கடைசி ரைடில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி செய்த தொழில்நுட்ப தவறால் ஒரு புள்ளியை இழந்தது. இதனால் இந்த ஆட்டம் 20-20 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது. பட்னாவில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ்அணிகள் இன்று மோதுகின்றன.

பிரபல கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில்  3 மாதங்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் பிரேசில் அணி வென்றது. மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த  மெஸ்ஸி, “இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். சிலிக்கு எதிரான போட்டியில், தனக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,  வெண்கல பதக்கத்தையும் வாங்க மெஸ்ஸி மறுப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டு   50,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில்  உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள சக நாட்டவரான பிரனாய்யை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். ஆனால் சரிவில் இருந்து மீண்ட பிரனாய் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். . 59 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனாய் 13 க்கு 21, 21க்கு 11, 22க்கு 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்துடன் 6-வது முறையாக மோதிய பிரனாய்க்கு இது  2-வது வெற்றியாகும்.  2-வது சுற்று ஆட்டத்தில் பிரனாய், டென்மார்க் வீரர் ராஸ்முஸ் ஜெம்கேவை எதிர்கொள்கிறார். இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரீகாந்த் கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேஷியா ஓபன் போட்டியில் 2-வது சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சமீர் வர்மா 17க்கு 21, 12க்கு 21 என்ற நேர்செட்டில் 9-ம் நிலை வீரரான டென்மார்க்கின் அன்டோன்சென்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 46 நிமிடம் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21க்கு 9, 21 க்கு 17 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் யூவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு37 நிமிடமே தேவைப்பட்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் சிந்து, ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை சந்திக்கிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21க்கு 16, 21க்கு 17 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்-கிறிஸ் லான்கிரிட்ஜ் இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடியும் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

 

இந்திய கிரிக்கெட் அணிக்கு இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனா பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக கடந்த 2017 முதல் ரவி சாஸ்திரி உள்ளார். இரண்டு ஆண்டு கால பதவி, உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தபோதிலும் விண்டீஸ் தொடர் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில, புதிய தலைமை, பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் என 7 பேருக்கு தேர்வும் நடைபெற்று வருகிறது.ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டது. மீண்டும் இவர் தானா என நினைத்த நிலையில், இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்தனா  இந்திய அணி பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஐ.பி.எல்., தொடரில் ஜெயவர்தனா மும்பை அணி பயிற்சியாளராக உள்ளார். இவர் வந்த பிறகு தான் மும்பை அணி மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராவும் ஜெயவர்த்னா செயல்பட்டுள்ளார்.

இதேபோல 2011ல் இந்தியாவுக்கு உலக கோப்பை வெல்ல கைகொடுத்த தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன், ஆஸ்திரேலியாவின் டாம் மூடியும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளனராம். சமீபத்தில் ஐதராபாத் பயிற்சியாளர் பதவியில் இருந்து டாம் மூடி விலகியதாகவும் கூறப்படுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் அணி திரில் வெற்றிபெற்றது

உலகக்கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டம்  மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் காட்ரெல் 4 விக்கெட்டும், பிராத்வெயிட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 28-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது.

225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி

49.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி 4 விக்கெட்டுகளும், பும்ரா, சாஹல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 27-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றது.

இதனிடையே, இன்று நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.