Home Archive by category விளையாட்டு (Page 26)

விளையாட்டு

 

 

சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் ரொனால்டோவின் அபார ஆட்டத்தால், ஜூவென்டஸ் அணியை  ரியல் மாட்ரிட் அணி வீழ்த்தியது.  ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் –  ஜுவென்டஸ் அணிகள் மோதியது. இரண்டு போட்டிகளாக நடக்கும் காலிறுதி  சுற்றின் முதல் போட்டி, இத்தாலியில் நடத்தப்பட்டது. போட்டி தொடங்கிய 3வது நிமிடத்தில், ரொனால்டோ முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பிறகு 64-வது நிமிடத்தில் பைசைகிள் கிக் மூலமாக அட்டகாசமான கோல் அடித்த ரொனால்டோ, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.  

இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில், ஜூவெண்டஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.

சிட்னி: ஏப்ரல் – 04

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரேக் டையர் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளில் அவர்களை விரைவில் விளையாட அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டீவன் சுமித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நாளை தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா : ஏப்ரல்-03

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் வரும் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில், மொத்தம் 19 வகையான விளையாட்டு போட்டிகளில் 275 பதக்கங்களை வெல்ல ஆயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர். இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கவுள்ளன. பி.வி. சிந்து, இந்திய அணிக்குத் தலைமை தாங்கி கொடியேந்தி அணிவகுக்க உள்ளார்.

 

 

உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில், ஸ்பெயினின் ரபேல் நடால் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இருந்த ரஃபேல் நடால், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் போட்டியின் காலிறுதி சுற்றில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே, பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதலிடத்தை பிடித்தார்.  ஆனால், அண்மையில் நடந்து முடிந்த மியாமி ஓபன் போட்டியில் பெடரர் தோல்வி அடைந்தார். இதனால் 10 புள்ளிகளை இழந்த அவர், ஏடிபி தரவரிசையில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக இரண்டாவது இடத்தில் இருந்த நடால், மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். 

பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன. பல்வேறு வீரர்களும் டிவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான பிலிப் ஹியூக்ஸ், கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி சிட்னியில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அப்போது பவுன்சர் பந்து தலையில் பயங்கரமாக தாக்கியதில் 27 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நிலைகுலைந்து போயினர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அதிர்ச்சியில் உறைந்து போன ஆஸ்திரேலிய ரசிகர்கள், அதன் பின் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், இன்றுடன் பிலிப் ஹியூஸ் இறந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. பிலிப் ஹியூஸ் இறந்த நாளான இன்று அவருக்கு பல்வேறு வீரர்களும் இரங்கல்களை நினைவுபடுத்தி வருகின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியானது அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் ஹாக்கி விளையாட்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 18 வகை விளையாட்டுகளில் 275 பிரிவுகளில் மொத்தம் 70 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கவுள்ளனர். இதில், ஹாக்கி விளையாட்டுக்கான அட்டவணையை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தொடரில் பங்கேற்றுள்ளன. ஆடவர் பிரிவை பொறுத்தவரை இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும் படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, கண்டா ஏ பிரிவிலும், பி பிரிவில் இந்தியா, வேஸ்ல், மலேசியா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில், ஆசிய கோப்பையை இந்திய ஆடவர் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மகளிர் பிரிவுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடக்க ஆட்டத்தில் வேல்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

2017 ஆண்டுக்கான சிறந்த ரக்பி வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை நியூசிலாந்தை சேர்ந்த Barrett மற்றும் Portia தட்டிச் சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் ஒவ்வொரு வகையான விளையாட்டிலும் சிறந்து வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்குவது வழக்கம். அதன்படி ரக்பி விளையாட்டில் நடப்பாண்டிற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மொனாக்கோ நாட்டில் உள்ள மாண்டி கார்லோ நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த ரக்பி வீரருக்கான விருது பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஐந்து வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதில், நியூசிலாந்தை சேர்ந்த Barrett 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரக்பி வீரர் விருதை வென்றார். தொடர்ந்து 2வது முறையாக இவர் இந்த விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சிறந்த ரக்பி வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது .இந்த விருதை நியூசிலாந்தை சேர்ந்த Portia தட்டிச் சென்றார். ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் விருதை வென்று அசத்தினர்.

சிறந்த நடுவருக்கான விருது அயர்லாந்தை சேர்ந்த ஜாய் நெவில்லே க்கு வழங்கப்பட்டது.

இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சாதனை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியா-இலங்கை இடையே 2வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இலங்கை அணியின் முதல் இன்னிங்சின் போது அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் அஸ்வின் – ஜடேஜா இணை டெஸ்டில் 300வது விக்கெட்டுகள் மேல் வீழ்த்தி சாதனை படைத்தது. இருவரும் இணைந்து 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 304 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதில் அஸ்வின் 163 விக்கெட்டுகளும், ஜடேஜா 141 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

31 வயதான சென்னையை சேர்ந்த அஸ்வின் 54 டெஸ்டில் விளையாடி 300 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். தவிர,  டெஸ்டில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது வீரர் அஸ்வின்.

கேப்டனாக இருந்து அதிக சதம், இரட்டை சதம் அடித்த சாதனைகளில் கவாஸ்கர் சாதனையை முறியடித்த கோலி, லாரா சாதனையை சமன் செய்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் வீராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 62-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 19-வது செஞ்சூரியாகும்.

நாக்பூர் டெஸ்டில் இன்று அடித்த சதம் மூலம் வீராட் கோலி புதிய சாதனை படைத்தார். கேப்டன் பதவியில் அவர் 12-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இந்திய டெஸ்ட் கேப்டன்களில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். அவர் கவாஸ்கரை முந்தினார். கவாஸ்கர் கேப்டன் பதவியில் 11 டெஸ்ட் சதம் அடித்து இருந்தார். அசாருதீன் (9 சதம்), தெண்டுல்கர் (7 சதம்), பட்டோடி, கங்குலி, டோனி (தலா 5 சதம்) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

விராட் கோலி கேப்டன் பதவியில் ஒரே ஆண்டில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த ஆண்டில் அவர் கேப்டன் பதவியில் 10 செஞ்சூரி (டெஸ்ட் 4 + ஒருநாள் போட்டி 6) அடித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), 2005 மற்றும் 2006-ம் ஆண்டிலும், ஸ்மித் (தென்ஆப்பிரிக்கா) 2005-ம் ஆண்டிலும் தலா 9 சதம் அடித்து இருந்தனர். இதை முறியடித்து கோலி புதிய சாதனை புரிந்தார். சர்வதேச போட்டியில் வீராட் கோலி 51-வது செஞ்சூரியை (டெஸ்ட் 19 + ஒருநாள் போட்டி 32) பதிவு செய்தார்.

சதம் அடித்த விராட் கோலி அந்த சதத்தை இரட்டை சதமாக மாற்றினார். இது அவரின் ஐந்தாவது இரட்டை சதமாகும். இதன்மூலம் கேப்டனாக இருந்து ஐந்து இரட்டை சதங்கள் விளாசிய லாராவுடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார் விராட் கோலி.