Home Archive by category விளையாட்டு (Page 28)

விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

டெல்லி : ஏப்ரல்-05

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 929 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் விராட்கோலி 912 புள்ளியுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோரூட், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முறையே 3-வது, 4-வது இடத்தில் உள்ளனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் 820 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் புஜாரா 7-வது இடத்தில் உள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் மார்கிராம் முதல் முறையாக 10 இடத்துக்குள் வந்துள்ளார். அவர் 759 புள்ளியுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா : ஏப்ரல்-05

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது.

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில், இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில், 48 கிலோ பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா : ஏப்ரல்-05

காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் ஆக்கி போட்டியில் இந்தியா ‘ஏ’ பிரிவில் உள்ளது. இதில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, மலேசியா, வேல்ஸ் ஆகிய அணிகள் உள்ளது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் இன்று மோதியது. இதில் 2-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்தியா தரப்பில் ராம்பால் 34-வது நிமிடத்திலும், பிரதன் 41-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். வேல்ஸ் அணியில் டேலே, பிரெஞ்ச், ஜோன்ஸ் ஆகியோர் கோல் அடித்தனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியா : ஏப்ரல்-05

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில், 71 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பிரிவில் 28 வயதான குருராஜா, மொத்தம் 249 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்தார்.

 

 

சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் ரொனால்டோவின் அபார ஆட்டத்தால், ஜூவென்டஸ் அணியை  ரியல் மாட்ரிட் அணி வீழ்த்தியது.  ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் –  ஜுவென்டஸ் அணிகள் மோதியது. இரண்டு போட்டிகளாக நடக்கும் காலிறுதி  சுற்றின் முதல் போட்டி, இத்தாலியில் நடத்தப்பட்டது. போட்டி தொடங்கிய 3வது நிமிடத்தில், ரொனால்டோ முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பிறகு 64-வது நிமிடத்தில் பைசைகிள் கிக் மூலமாக அட்டகாசமான கோல் அடித்த ரொனால்டோ, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.  

இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில், ஜூவெண்டஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.

சிட்னி: ஏப்ரல் – 04

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரேக் டையர் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளில் அவர்களை விரைவில் விளையாட அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டீவன் சுமித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நாளை தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா : ஏப்ரல்-03

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் வரும் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில், மொத்தம் 19 வகையான விளையாட்டு போட்டிகளில் 275 பதக்கங்களை வெல்ல ஆயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர். இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கவுள்ளன. பி.வி. சிந்து, இந்திய அணிக்குத் தலைமை தாங்கி கொடியேந்தி அணிவகுக்க உள்ளார்.

 

 

உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில், ஸ்பெயினின் ரபேல் நடால் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இருந்த ரஃபேல் நடால், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் போட்டியின் காலிறுதி சுற்றில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே, பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதலிடத்தை பிடித்தார்.  ஆனால், அண்மையில் நடந்து முடிந்த மியாமி ஓபன் போட்டியில் பெடரர் தோல்வி அடைந்தார். இதனால் 10 புள்ளிகளை இழந்த அவர், ஏடிபி தரவரிசையில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக இரண்டாவது இடத்தில் இருந்த நடால், மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். 

பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன. பல்வேறு வீரர்களும் டிவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான பிலிப் ஹியூக்ஸ், கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி சிட்னியில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அப்போது பவுன்சர் பந்து தலையில் பயங்கரமாக தாக்கியதில் 27 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நிலைகுலைந்து போயினர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அதிர்ச்சியில் உறைந்து போன ஆஸ்திரேலிய ரசிகர்கள், அதன் பின் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், இன்றுடன் பிலிப் ஹியூஸ் இறந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. பிலிப் ஹியூஸ் இறந்த நாளான இன்று அவருக்கு பல்வேறு வீரர்களும் இரங்கல்களை நினைவுபடுத்தி வருகின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியானது அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் ஹாக்கி விளையாட்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 18 வகை விளையாட்டுகளில் 275 பிரிவுகளில் மொத்தம் 70 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கவுள்ளனர். இதில், ஹாக்கி விளையாட்டுக்கான அட்டவணையை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தொடரில் பங்கேற்றுள்ளன. ஆடவர் பிரிவை பொறுத்தவரை இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும் படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, கண்டா ஏ பிரிவிலும், பி பிரிவில் இந்தியா, வேஸ்ல், மலேசியா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில், ஆசிய கோப்பையை இந்திய ஆடவர் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மகளிர் பிரிவுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடக்க ஆட்டத்தில் வேல்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.