Home Archive by category Exclusive

Exclusive

.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது.

இது அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி, சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தினர். அதுமட்டுமின்றி, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இதையொட்டி இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு வடகொரியா ஆக்கப்பூர்வமான வகையில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காதபோதும், ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.

கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், வடகொரியாவின் வடக்கு பியாங்கன் பகுதியில் குறைந்த தொலைவு செல்லக்கூடிய இரு ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.  இவை 270 மற்றும் 420 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றுள்ளன. கடந்த ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக நடத்தப்படும் ஏவுகணை சோதனை இது என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் 100, 50,  மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை புதிய வண்ணத்தில்  அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி 100, .50 ரூபாய்புதிய நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுப்பட்டது.  தற்போது 20 ரூபாய் புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் அந்த நோட்டு உள்ளது. ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறு பக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றுள்ளது. மேலும் எல்லா ரூபாய் நோட்டுக்களிலும் இருப்பது போல் தமிழ் உள்பட 15மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.  இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. புதிய நோட்டுக்கள் வெளியிட்டாலும் பழைய நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  மூவாயிரத்து  26 ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு  24  ஆயிரத்து  208 ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 40 ரூபாய் 20 காசுகளுக்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 40 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையானது.

பெட்ரோல் லிட்டருக்கு 13 காசுகளும், டீசல் லிட்டருக்கு 7 காசுகளும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு 75 ருபாய் 75 காசுகளுக்கும், டீசல் 1 லிட்டருக்கு 69 ருபாய் 96 காசுகளுக்கும் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 105 புள்ளி 35 புள்ளிகள்  அதிகரித்து 38 ஆயிரத்து  872  ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி31 புள்ளி 65 புள்ளிகள்  அதிகரித்து 11  ஆயிரத்து 675  ஆக நிறைவுற்றது

உலகின் மிகப்பெரிய விமானம் தனது முதல் பயணத்தை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிகழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது.

பிரபல கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோராப்ட்’ நிறுவனத்தை 1975- ஆண்டில் பில் கேட்ஸ் உடன் இணைந்து கூட்டாக தொடங்கியவர் பால் ஆல்லென். இவர் வானத்தில் பறந்தவாறு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்துடன் உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தார். இதன் விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில்‘ஸ்டிராட்டோலான்ச்’ என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார். விமானத்தின் வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமாக அமெரிக்கா நேரப்படி நேற்றுகாலை 6.58 மணியளவில் பறக்க விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மோஜாவே விமானம் மற்றும் விண்வெளி துறைமுகத்தில் இருந்து இந்த ‘மெகா’ விமானம் புறப்பட்டு சென்றது. மோஜாவே பாலைவனப் பகுதியில், 17 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 189மைல் வேகத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் வெற்றிகரமாக பறந்த இந்த விமானம் புறப்பட்ட இடத்தில் பத்திரமாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இரட்டை விமானத்தைப் போன்றவடிவமைப்புடன் 385 அடி அகலம், 238 அடி நீளம் கொண்ட இந்த விமானத்தை  நிறுத்தி வைக்க  பெரிய கால்பந்து திடல் அளவிலான இடம் வேண்டும். ஆனால், இந்த பெருமைக்குரிய சாதனைக்கு சொந்தக்காரராக கருதப்படும் பால் ஜி ஆல்லென் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி அன்றுதனது 65-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது

உலக நாடுகள் மற்றும் ஐநாவின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்த்து.  இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.  அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27, 28-ந்தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டாவது உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. அணு ஆயுதங்களை ஓரளவுக்கு கைவிட, தன் மீதான பொருளாதார தடைகளை  அகற்ற வேண்டும் என்று வடகொரிய தலைவர்  கூறியதே, பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணம் என அமெரிக்கா கூறியது. ஆனால் வடகொரியாவோ, தங்கள் வாழ்வாதாரத்துக்காக பொருளாதார தடைகளில் ஒரு பகுதியையாவது விலக்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறியதாக தெரிவித்தது. இந்நிலையில், இப்போது 3-வது முறையாக கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். இதைஏற்றுக் கொண்ட  வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்  பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இதுபற்றி வடகொரிய நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ‘‘இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களுடனும், சரியான அணுகுமுறையுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா முன்வந்தால், 3-வது உச்சி மாநாடு நடத்தலாம் என்று கூறினார்

சென்னையில் ஒரு கிராம  ஆபரண தங்கத்தின்   விலை மூவாயிரத்து   56 ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு  24  ஆயிரத்து 448  ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 41 ரூபாய்க்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 41ஆயிரம் ரூபாய்க்கும்  விற்பனையானது.

பெட்ரோல் 1 லிட்டருக்கு 5 காசுகள் குறைந்துள்ளது

சென்னையில் பெட்ரோல் 1லிட்டருக்கு 75 ருபாய் 56 காசுகளுக்கும்,டீசல் 1 லிட்டருக்கு 69 ருபாய் 80 காசுகளுக்கும் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 238 புள்ளி 69 புள்ளிகள் அதிகரித்து   38 ஆயிரத்து 939 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 67 புள்ளி 45 புள்ளிகள்  சரிந்து 11 ஆயிரத்து 671 ஆக நிறைவுற்றது

சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு  வந்த பயணிகளின் உடமைகளை ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது  இளைஞர் ஒருவர் வைத்திருந்த கைப்பையில் 510 கிராம்  தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த ஊழியர்கள் அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரி கிரிராணியிடம் ஒப்படைத்தனர். தங்கத்தை எடுத்து வந்த  இளைஞரை கைது செய்த. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர்  சென்னை திருவல்லிக்கேணியைச்  சேர்ந்த அஸ்பக் ஹஸன்  என்பது தெரியவந்த்து.  

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 18  லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையிலிருந்து சேலத்திற்கு குறுகிய நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்ததேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.  இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் 277 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த 8 வழி சாலைக்கு சேலம்,தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்தும்  திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் , விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர்அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை  நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோர் அமர்வு முன்பு கடந்த 8மாதங்களாக நடைபெற்றது. வாதப் பிரதிவாதங்கள் மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மக்களவைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதிகள்,சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உத்தரவிட்டனர். 15 கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை  சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. மேலும் அந்த செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில், டிக்-டாக் செயலி தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை  முன்வைக்கப்பட்டது. ஆனால்,  அதனை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், உரிய தருணத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சோகம் தொடர்கிறது. அந்த அணி நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி தொடர்ந்து 6-வது தோல்வியை தழுவியதால் கேப்டன் கோலி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். போட்டிக்கு பிறகுசெய்தியாளர்களிடம் பேசிய அவர் 160 ரன்கள் குவித்தால் கடும் போட்டியை கொடுக்க முடியும் என்று நினைத்த்தாகவும், . சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்ததால் 150 ரன் தான் இலக்காக நிர்ணயிக்கமுடிந்த்தாகவும் தெரிவித்தார். 2-வது இன்னிங்சில் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் அமையவில்லை எனவும் இந்த ஆட்டத்தில் தங்கள் அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை எனவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டு அதற்கான காரணம் தேடுவதும், அதனை பேசுவதும் முறை அல்ல என்ற கோலி நாள்தோறும் தோல்விக்கு நொண்டிசாக்கு சொல்ல முடியாது என்றார்.