Home Archive by category Exclusive (Page 6)

Exclusive


டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடப்படுகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையில், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் அளிக்கும் திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தவிர 2020 ம் ஆண்டு மார்ச் 31 க்குள் 22 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்களும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த தேர்த்ல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்.

ராணுவத்தின் உளவு பணிகளுக்காக இஸ்ரோ உருவாக்கிய 436 கிலோ எடை கொண்ட எமிசாட் செயற்கைகோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., – சி 45 ராக்கெட் இன்று காலை 9.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லித்துவேனியா ஆகிய நாடுகளுடைய 28 செயற்கைகோள்களை சுமந்த படி பி.எஸ்.எல்.வி., – சி 45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.

அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா நாட்டின் 2 செயற்கைக்கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக்கோளும் பிஎஸ்எல்வி – சி 45 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட்டது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஆழித்தேரோட்ட விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் தியாகராஜர் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

இதில், லடசக்கணக்கான பக்தர்கள், தியாகேசா என்ற கோஷத்துடனும், பக்தி பரவசத்துடனும், தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

ஹனோய்: வியட்நாமில் ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய 14 வயது சிறுமி ஷாக் அடித்து பலியாகியுள்ளார்.

வியட்நாமின் ஹா தின் மாகாணத்தில் உள்ள ஹுவாங் சோன் மாவட்டத்தை சேர்ந்தவர் லீ தி ஜோவன்(14). அவர் 6  ஐபோன் வைத்திருந்தார்.

செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவது அவரின் பழக்கம். தூக்கத்தில் அவரது கை சார்ஜரின் கேபிள் மீது பட்டதில் மின்சாரம் தாக்கியது. படுக்கையில் சுயநினைவின்றி கிடந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் இழந்தார்.

பண்டிப்போரா மாவட்டத்தில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஸ்ரீநகரில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று பிற்பகலில் விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகள் மட்டும் நடைபெற்றன.

ஸ்ரீநகர் முழுவதும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 8 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. ஸ்ரீநகர், பண்டிப்போரா பகுதிகளில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டன.

காஷ்மீரில் 275 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். இந்த ஆண்டில் 291 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதில் 80 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 183 பேர் உயிரிழந்துள்ளனர். பொது மக்களில் 62 பேர் பலியாகி உள்ளனர். கடந்த அக்டோபர் வரை 168 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

2017 ஆண்டுக்கான சிறந்த ரக்பி வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை நியூசிலாந்தை சேர்ந்த Barrett மற்றும் Portia தட்டிச் சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் ஒவ்வொரு வகையான விளையாட்டிலும் சிறந்து வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்குவது வழக்கம். அதன்படி ரக்பி விளையாட்டில் நடப்பாண்டிற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மொனாக்கோ நாட்டில் உள்ள மாண்டி கார்லோ நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த ரக்பி வீரருக்கான விருது பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஐந்து வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதில், நியூசிலாந்தை சேர்ந்த Barrett 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரக்பி வீரர் விருதை வென்றார். தொடர்ந்து 2வது முறையாக இவர் இந்த விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சிறந்த ரக்பி வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது .இந்த விருதை நியூசிலாந்தை சேர்ந்த Portia தட்டிச் சென்றார். ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் விருதை வென்று அசத்தினர்.

சிறந்த நடுவருக்கான விருது அயர்லாந்தை சேர்ந்த ஜாய் நெவில்லே க்கு வழங்கப்பட்டது.

இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சாதனை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியா-இலங்கை இடையே 2வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இலங்கை அணியின் முதல் இன்னிங்சின் போது அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் அஸ்வின் – ஜடேஜா இணை டெஸ்டில் 300வது விக்கெட்டுகள் மேல் வீழ்த்தி சாதனை படைத்தது. இருவரும் இணைந்து 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 304 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதில் அஸ்வின் 163 விக்கெட்டுகளும், ஜடேஜா 141 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

31 வயதான சென்னையை சேர்ந்த அஸ்வின் 54 டெஸ்டில் விளையாடி 300 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். தவிர,  டெஸ்டில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது வீரர் அஸ்வின்.