Home Archive by category Healthy Life

Healthy Life


கிராமப்புறங்களில் நடைபெறும் அரசுப் பணிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தின் கீழ் உள்ளூர் மக்களுக்கு ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்புக்கு உறுதியளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தினக்கூலியாக அளிக்கப்படும் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஒரு நாளைக்கான கூலி 168-லிருந்து 274 ரூபாய் வரை முன்னர் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளொன்றுக்கு 224 ரூபாய் அளிக்கப்படுகிறது. 

மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் மத்திய அரசு கூலி உயர்வை அறிவிக்கவில்லை.


100
நாள் வேலையுறுதி திட்டத்தின் தினகூலி தொகையை உயர்த்தி அறிவிக்க தலைமை தேர்தல் ஆணையத்திடம் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதனையடுத்து 100 நாள் வேலையுறுதி திட்டப்பணிகளுக்காக அந்தந்த மாநிலத்தில் அளிக்கப்படும் தினக்கூலியில் 5% வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூதுவளை வேலிகளில் வளரும் அற்புத மூலிகை கொடி.சிறு முட்கள் நிறைந்து இதன் இலை காணப்படும். பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. தொடர்ந்து மாறிவரும் பருவமாற்றதினால் ஏற்படும் சளி இருமல் முதலியவற்றிற்கு இதம் அளிக்ககூடியது.

சளி, இருமல் நேரங்களுக்கு ஏற்ற  தூதுவளை சூப் செய்முறையை தெரிந்து கொள்ளலாமா!

தேவையான பொருட்கள்:

தூதுவளை இலை – 1 கப்

புளி – சிறிய அளவு

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

கொத்தமல்லி – அரை ஸ்பூன்

பூண்டு – 5 பல்

துவரம் பருப்பு – 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடுகு – 1 ஸ்பூன்

மல்லி இலை , கருவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து தண்ணியை வடிகட்டி வைக்க வேண்டும்.

பின்னர், மிக்ஸியில் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து அதனுடன் புளிதண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர், அதில் தூதுவளை மற்றும் பூண்டை அரைத்து அதனுடன் சேர்த்து , 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியாக, ஒரு கடாயில் எண்ணெய் அதில் கடுகை போட்டு தாளித்து, சூப்பில் கொட்டவும்.

சளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப் தயார்

டிராகன் ஃப்ரூட் மிகவும் வித்தியாசமான ஒரு சுவையுடன் வரும் ஒரு பழம். அந்த பழம் தொண்டையில் சிறிது இருக்கம் தந்தாலும், மிகவும் ஆரோக்கியமானது. அந்த டிராகன் ஃப்ரூட்டை ஜூசாக மட்டும் இல்லாமல், அதனை முகத்திற்கு ஒரு ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டிராகன் ஃப்ரூட்டை முகத்தில் தடவி, அதன் விதைகளை வைத்து மசாஜ் செய்யவும்.10 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிடவும்.

பிறகு முகத்தில் ஐஸ் கொண்டு ஒரு நிமிடத்திற்கு மசாஜ் செய்து பின் கற்றாழை ஜெல் தேய்த்துத் தூங்கி விடவும்.

இதனை இடை விடாமல் செய்தால், முகத்தில் நிறமாற்றம், கட்டிகள், மேக்கப் அலர்ஜி போன்ற எந்த ஒரு பிரச்சனைகளும் வராது.

க்ரீன் டீ, குடிப்பதற்கு மட்டுமல்ல. முகத்தில் உள்ள பருக்களையும். நிறக்குறைபாடுகளையும் நீக்கும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த க்ரீன் டீயுடன் ஒரு சில பொருட்களை உபயோகப்படுத்தி நம் சருமத்தை அழகாக பராமரிக்கலாம்.

தேவையானவை:

க்ரீன் டீ

முல்தானி மிட்டி

ஆப்பிள் சைடர் வினிகர்

ஃப்ரங்கின்சன் எசன்ஷியல் ஆயில் – 5 துளிகள்

லாவண்டர் எசன்ஷியல் ஆயில் – 5 துளிகள்

செய்முறை:

சம அளவு க்ரீன் டீ, முல்தானி மிட்டி, ஆப்பிள் சைடர் வினிகருடன் ஃப்ரங்கின்சன் எசன்ஷியல் ஆயில் – 5 துளிகள் மற்றும் லாவண்டர் எசன்ஷியல் ஆயில் – 5 துளிகள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். ஓரளவு திடமான பதத்திற்கு வரும் வரை முல்தானி மிட்டியைச் சேர்க்கவும்.

முகத்தில் தடவி 20 நிமிடத்திற்குப் பிறகு கழுவி விடவும்.

இந்த கலவை, சருமம் மிகவும் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது.

இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும். முழுமையான பலனை இரண்டு மாதங்களிலேயே அடையலாம்.

வெந்நீரினை குடிப்பவர்களைக் கண்டால் “வியாதிக்காரர்” என்று பெயர் வைத்து விடுகின்றனர், பெரும்பாலானோர் குளிர்ந்த நீரை அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அதனாலேயே வெந்நீர் வியாதி நேரங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலை உள்ளது. அதே மனநிலையில் தான் தங்கள் குழந்தைகளுக்கும் இதைப் பழக்கப்படுத்துகிறார்கள்.

இது போன்ற பல நன்மைகள் இருந்தும், இந்த காலங்களில் கேன் தண்ணீரைப் பருகுவதால், சுட வைத்துக் குடிப்பது அவ்வளவு நல்லது இல்லை என்றும் ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. கேன் தண்ணீரிலும், ப்யூரிஃபையர்களில் வரும் தண்ணீரிலும் ‘க்ளோரின்’ கலந்து வருவதால், அந்த க்ளோரின் அணுக்கள் பிரிந்து ஒரு சில நேரங்களில்  விஷமாக மாறும் தன்மையும் உள்ளது

உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் பாதிப்பேர் கொசுக்களால் பரப்பப்படும் வைரஸ் நோய்களுக்கு இலக்காகும் நிலையில் உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.

மழைக் காலங்களில் இனப்பெருக்கம்  செய்வதால், மழையில் கொசுக்களால் பரவும் நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கொசுக்களால் பரவும் பல நோய்களுள் தற்போது மக்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது டெங்கு காய்ச்சல் தான்.

டெங்கு காய்ச்சலால், மேற்கு வங்கத்தில் மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் கொசுக்கள் ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயைக் முழுவதுமாக நிறுத்தும் அளவிற்கு அலோபதி மருந்துவம் முன்னேறவில்லை. இந்த நோய் ஏடிஸ் எஜிப்டி வகையைச் சேர்ந்த ‘அனோபிலஸ்’ என்ற பெண் கொசுக்கள் மூலம் பரப்பப்படுகிறது. நோய் தாக்கப்பட்ட உடன் சிகிச்சை பெற்றால் முழுவதுமாக குணமாக்க முடியும் என்றும், நோய் முற்றிவிட்டால் உயிரை காப்பாற்றுவது கடினம் என்கிறது மருத்துவத் துறை.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:

4 – 6 நாட்களுக்கு தொடர்ந்த காய்ச்சல் வரும்.

தலை வலி, உடல் வலி, கண் வலிகளுடன் கூடிய தசைப் பிடிப்பும் எலும்பு வலியும் வரும். சில நேரங்களில் மூக்கு, பல் போன்ற இடங்களில் ரத்தப்போக்கு ஏற்படும். மனிதனுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் எண்ணிக்கை குறையும்.