Home Archive by category Recent News

Recent News

கர்நாடகாவில் கனமழை காரணமாக உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை கடலோர கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது.  தென் கன்னடம், உடுப்பி, குடகு, வட கன்னடம், ஹாவேரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துவருகிறது. கேரளமாநிலத்தை ஒட்டியுள்ள தென் குடகு மாவட்டத்தில் வழக்கத்தைவிட கன மழை பெய்துவருவதால், அந்த மாவட்டத்தின் மடிக்கேரி, விராஜ்பேட், பாகமண்டலா பகுதிகளில் சாலைகள், குளங்கள், ஏரிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். ஒருசில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 23 முதல் 27-ஆம் தேதி வரை குடகு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து  உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  குடகு மாவட்டத்தில் வழக்கத்தைவிட நல்ல கனமழை பெய்துவருவதால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை சோதனை சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் நீடித்த  துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்பு படையினர் 9 பேர், தலிபான் பயங்கரவாதிகள் 10 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். தலிபான் தரப்பில் உயிரிழந்தவர்களில் அந்த இயக்கத்தின்  தளபதி முல்லா கவுசூதிங்கும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியுள்ள தலீபான் பயங்கரவாதிகளைத் தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்

 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையின்போது, புறநானுற்றுப் பாடலை மேற்கோள் காட்டியது உலகத்திற்கு தமிழையும் தமிழர்களையும் அடையாளப்படுத்தி பெருமைப்படுத்திய நிகழ்ச்சி என கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு சட்டத்துக்குட்பட்டு மனித நேயத்தோடு பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டணி குறித்த கற்பனையான, தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்றும் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் சிப்லுன் தாலுகாவில் உள்ள திவாரே அணை 14 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அணையின் கட்டுமானப்பணிகளை சிப்லுன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்சதானந்த் சவானுக்கு சொந்தமான ‘கெம்டெக்’ என்ற நிறுவனம் மேற்கொண்டது. கடந்த நவம்பர் மாதமே இந்த அணையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டிருந்தனர். இதையடுத்து,  சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் அணையை பார்வையிட்டு சில மராமத்து பணிகளை மேற்கொண்டனர். ஆனால், அணையை பலப்படுத்தவோ அல்லது அணையில் விரிசல் ஏற்பட்ட பகுதியை நிரந்தரமாக சீரமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை முதல், விடாது பெய்த கனமழை காரணமாக திவாரே அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், திடீரென அணையில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த பகுதி உடைந்து அணை நீர் வெள்ளமாக  வெளியேறியது. இதில் அணையை ஒட்டியுள்ள திவாரே உள்ளிட்ட 7 கிராமங்களை  வெள்ள நீர் சூழ்ந்தது.  வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பலர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.இந்நிலையில் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர். மாயமான இன்னும் 4 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் வேகமுடன் நடந்து வருகின்றன.

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இக்கோவிலில் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறும் திருத்தேர் வீதி உலா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த இரு விழாக்களின் போதும் மூலவரே தேரில் எழுந்தருள்வது சிறப்பாகும். .இந்தாண்டிற்கான ஆனித் திருமஞ்சன விழா கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. விநாயகர், முருகன், நடராஜர், சிவகாக சுந்தரி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய ஐவரும் தனித்தனித் தேர்களில் வலம் வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபட்டு வருகின்றனர். தேர்கள் செல்லும் வழிகளெல்லாம், பெண்கள் வண்ணக் கோலமிட்டு சாமி தரிசனம் செய்தனர் .மேலும் தேர்த்திருவிழாவையொட்டி, பெண்களின் பரதநாட்டியம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை திருதேர் நிலைக்கு  வந்தடைந்ததும் அங்கு சமகால லட்சார்ச்சனை என்ற சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டுள்ளனர்.

 என்று  தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிட மக்களுக்காக குரல் கொடுத்த இரட்டைமலை சீனிவாசனின் 160 ஆவது பிறந்த நாளையொட்டி,  சென்னை கிண்டியில் அவரது நினைவாக கட்டப்பட்டுள்ள மண்டபத்தில்நிறுவப்பட்டுள்ள சிலைக்கு  அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, பெஞ்சமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியின் கீழ்மட்ட தொண்டர்களுக்கும் மதிப்பளிப்பது அதிமுக மட்டுமே என்றும் கொடி கட்டிய தொண்டனும், இன்று கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுகவில்தான் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்று தெரிவித்த அமைச்சர்,   சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் திறம்பட செயல்பட்டு அவரை மீட்டுள்ளதாகவும்,  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும்,நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “தன்னை ஏன் இப்படி வறுத்தெடுக்கிறீர்கள்  என்று  சலித்துக் கொண்டார். மேலும்  நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து தற்போது கருத்து கூற முடியாது” என்று  அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போனதால் அவரை கண்டுபிடிக்க நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் முகிலனை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்  நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில போலிசார் அவரை கண்டுபிடித்தனர். இதையடுத்து முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று ஆந்திரா போலீசார் காட்பாடி ரெயில்வே காவல் நிலையத்தில் முகிலனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். முகிலன் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி அறிந்த அவரது மனைவி பூங்கொடி அவரை சந்திப்பதற்காக நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டார். அவர் பயணம் செய்த  கார் கள்ளக்குறிச்சி அருகே வந்த போது திடீரென  டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.  இதில் காயமடைந்த பூங்கொடி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

159 கோடி ரூபாய் மதிப்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி கடந்த 4-ம் தேதி கொடியசைத்து  தொடங்கி வைத்தார். பின்னர் இந்த பேருந்துகள் அனைத்தும் விரைவுப்போக்குவரத்துக்கழகம், மாநகரப்போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய பேருந்துகளினுள் அவசர வழி என்று தமிழில் எழுதுவதற்கு பதில் அந்த வார்த்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம் பெற்று இருப்பது காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே போல தீயணைப்பான் உள்ளிட்ட அவசர குறிப்புகள் பலவும் தமிழில் எழுதப்படுவதற்கு பதில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இது, தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக அரசின் இந்த செயலுக்கு, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது கருத்தை  சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர், தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என்பது கண்டிக்கத்தக்கது என்றும் மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், அவர்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என  அதிமுக அரசு இந்தியை திணிப்பதாகவும் சாடியுள்ளார்.

தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படும் மாநில பேருந்துகளில் கூட இந்தி ஆக்கிரமிப்பு செய்து இருப்பது தமிழர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், தமிழகத்தில் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், . 2 ஆயிரம் அடியில் துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமல்ல, மனித உயிருக்கும் கேடு விளைவிக்கும் என்றும் கூறினார். தமிழகத்தில் மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது என்றும்  காவிரியில் தண்ணீர் இல்லாததால்  நிலத்தடி நீர் வற்றிவிட்ட நிலையில்  வறண்ட நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று  அவர் தெரிவித்தார். மேலும் நாடு எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக உயிர்நாடியான விவசாயத்தை அழிக்க வேண்டாம் என அவர்  வேண்டுகோள் விடுத்தார்.

. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாலைவனம் போன்ற இடங்களில் செயல்படுத்துங்கள் என திருச்சி சிவா வலியுறுத்தினார்.

இதனிடையே காவேரி படுக்கையில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக்கோரி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டிஸ் அளித்துள்ளார்.

சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். வழக்கமாக மாத இறுதி நாளில் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம்செலுத்தப்படும்என்றும்  ஆனால் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக கிண்டி, வடபழனி, வியாசர்பாடி, தாம்பரம், ஆவடி, உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் புறப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனிடையே, இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முடியவில்லை என தெரிவித்த அதிகாரிகள்,  குறைவான ஊதியம் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என  கேட்டுக் கொண்டனர். அதிகாரிகள் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை  கைவிட்டு பணிக்கு திரும்பினர்.