Home Archive by category Recent News (Page 2)

Recent News

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும்   ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி  .

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்  தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்பல்லோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், பல்வேறு தகவல்களை மருத்துவர்கள் விசாரணை ஆணையத்திடம் அளித்த பிறகும், மீண்டும் மீண்டும் மருத்துவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவதாகவும், எனவே விசாரணை ஆணையத்தில் 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதுவரை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.இந் நிலையில், இந்த தடை உத்தரவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதனிடையே,  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து,  மேலும் 4 மாதம், கால அவகாசத்தை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும்  மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4வது நாளாக நேற்றும் மும்பையில் தொடர் மழை பெய்தது. நேற்று இரவு மட்டும் மும்பையில் 360 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டும் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த தொடர் மழையால் சாலைகளில் மேலும் மழை நீர் சேர்ந்து ஆறுபோல் காட்சியளித்தது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாதர் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் தண்ணீரில் தத்தளித்தபடி பள்ளிக்கு சென்றனர். பல்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரெயில்கள் ரத்து, போக்குவரத்து மாற்றம் தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டு வருகிறது.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம்,  வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்கள், அதிமுகவைச்  கே.ஆர்.அர்ஜுனன், வி.மைத்ரேயன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த , டி. ராஜா, ஆகிய 5பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும், திமுக உறுப்பினரான கனிமொழியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலமும் முடிவடையும் சூழலில் அவர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.இதனால், தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 8- ந் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்களைத் திரும்பப் பெற 11-ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு தேவைப்படும் பட்சத்தில் 18-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுகவுக்கு 3 இடங்கள், திமுகவுக்கு 3 இடங்கள் என சரிசமாக கிடைக்கும். அந்த வகையில், திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக  இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின் போது ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி மீதியுள்ள  ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்புக்கு பதிலாக செம்பருத்தியை உபயோகிக்கலாம்.
2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும்.

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

செம்பருத்தி இலை தேநீரை குடிப்பதன் மூலம் நீங்கள் மிகவும் குறைவாக உணவு உண்ணவும் மற்றும் உண்ட உணவை வேகமாக ஜீரணம் செய்ய வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும் முடியும்.

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி. . இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க கடந்த 2013-ம் ஆண்டு கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவம் அவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. மேலும், அதிபர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பல வழக்குகள்  அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன. இதனிடையே வழக்கு விசாரணைக்காக மோர்சி கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தமோர்சியை.மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், முகமது மோர்சி கொலை செய்யப்பட்டதாகஅவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  இந்நிலையில், ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20  உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த துருக்கி அதிபர் எர்டோகன்,  எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் வலியுறுத்த வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்.

முதுர்ச்சியை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. நெல்லிக்கனி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.

பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும். பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.

மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

முந்திரியில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொள்வது நல்லது.

முந்திரியில் உள்ள ஒரு வகையான ஃபிளவனாய்ட் கண்களைப் பாதுகாப்பதுடன், புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைக் காத்து மிக விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பைச் சாப்பிட்டுவந்தால், பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமலே தடுக்கமுடியும். இதய நோயாளிகள் முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி கிடைத்துவிடும். மேலும் இதில், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் ஏற்படக் கூடிய அனீமியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

முந்திரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக மோதல் நீடித்து வருகிறது.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல்  வரி விதித்ததை அடுத்து சீனாவும், அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தது. இருநாடுகளும் இடையே ஏற்பட்ட வர்த்தக மோதல் போக்குஉலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல நாடுகள் கவலை தெரிவித்தன. இந்த சூழலில், ஜி 20மாநாட்டின் போது  இரு தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு சீன செய்தி நிறுவனம் ஒன்றுவெளியிட்டுள்ள செய்தியில், ,  , “சீனாவும், அமெரிக்காவும் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையை துவங்க  ஒப்புக்கொண்டுள்ளதாகவும்,   சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில்  இந்த பேச்சுவார்த்தையை தொடரும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சீனாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்து  இருப்பதாக அதில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,

அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டும் என்று அவரிடம்  கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

  தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர மத்திய,  மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனை பேரிடராக கருதி மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்க  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் பேசிய தேனி உறுப்பினர் ரவீந்திரநாத், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று கூறியது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்  சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற  ஓ. பன்னீர்செல்வம் மத்திய அரசிடம் தண்ணீர் பிரச்சனைக்காக நிதி கேட்டது ஏன் என்றும் அவர்  கேள்வி எழுப்பினர்.

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்த்து குறித்து  கருத்துக் கூற இயலாது என்றும்  அது அவரவரின் விருப்பம்எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெரிய கட்சிகளில் இடைநீக்கம் செய்வதும்,  பின்னர்  சேர்ப்பதும் இயல்பு என்றும்  கூறிய திருநாவுக்கரசர்,  காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் குறித்து  கருத்து கூற எதுவும் இல்லை என்று  கூறினார்.

ஈரோட்டில், கல்யாணி கிட்னிகேர் மருத்துவமனை உள்ளது. இதன் பெயரில் சில மாதங்களுக்கு முன்பு, முகநூலில் போலி கணக்கு துவங்கிய மர்மநபர்கள்  தங்களிடம் கிட்னி விற்பனை செய்தால், ஒரு கோடி ரூபாய் பணம் கிடைக்கும், என விளம்பரம் செய்தனர்.

  இதற்கு முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்து, தமிழகம் உள்பட, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோரிடம், பல கோடி ரூபாய் வசூலித்துள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் முகநூல் கணக்கு முடக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது,அப்போது நைஜீரியா நாட்டை சேர்ந்த, ஓகோவா ஸ்டீபன், , கொலின் ஸ்டேன்டிஆகியோருக்கு இந்த மோசடியில் தொடர்ப்பு இருப்பது தெரியவந்தது .இதையடுத்து    கர்நாடகா மாநிலம், பெங்களூரில்பதுங்கியிருந்த இருவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். பிசினஸ் விசாவில் வந்த இருவரும் கடந்தமூன்று ஆண்டுகளாக, பெங்களூருவில் தங்கி இருந்தது காவல்துறையினரின் முதற்கட்ட விசாராணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து டொயோட்டா கொர்லா கார் மற்றும் இருசக்கர வாகனத்தை  பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.