Home Archive by category Recent News (Page 273)

Recent News

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி, சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

மதுரை : ஏப்ரல்-02

மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் கடந்த 31ஆம் தேதி நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, மேடையின் அருகே விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி திடீரென தீக்குளித்தார். இதில், படுகாயம் அடைந்த அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரவியை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து, மருத்துவர்களிடம் ரவியின் சிகிச்சை விவரங்களை அறிந்ததுடன், உயர்ந்த சிகிச்சை அளிக்கும்படி, கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று காலை உயிரிழந்தார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரவியின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, ரவியின் உடல், அவரது சொந்த ஊரான சிவகாசிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் குரல் கொடுக்காதது ஏன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி : ஏப்ரல்-02

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். இந்த நடைபயணத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதரவு திரட்டவும் மதுரை-தேனி மாவட்டங்களில் 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

3-வது நாளான இன்று மதுரை உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி நோக்கி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்து செல்கின்றனர்.

செல்லும் வழியில் பொதுமக்களை சந்தித்து வைகோ பேசினார். அப்போது நாசகார நியூட்ரினோ திட்டத்தின் தீமைகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.

முன்னதாக, உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நியூட்ரினோ திட்டத்திற்கு கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். ஆனால், தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், மாணவர்கள் தொடர்ந்து இன்று 50-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி :ஏப்ரல்-02

தூத்துக்குடியில் மக்களின் உயிருக்கு உலை வைக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலை, தற்போது விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் துணையுடன் நடைபெறும் இந்த விரிவாக்கத்துக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 50-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையில் வெளியேறும் நச்சுப் புகையால் காற்று மாசுபடுவதுடன் பல்வேறு கொடிய நோய்களுக்கும் ஆளாவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீரில் நஞ்சு கலந்து உயிருக்கு உலை வைக்கும் அளவு பாதிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெறும் தன்னெழுச்சி போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். வ.உ.சி. கல்லூரி முன்பு, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.       

இதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு : ஏப்ரல்-02

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேவுள்ள காவிரிபாளையத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்மட்ட பலத்திற்கு தமிழக பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கூறினார்.

உலகம் முழுவதும் இந்தியாவின் கலாச்சாரம் வெகுவாகப் பரவி வரும் நிலையில், உலகம் முழுவதும் பல இடங்களில் இந்து மதக் கடவுள்களின் கோவில்கள் கட்டப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கட்டப்பட்டு வருகிற உலகின் மிகப்பெரிய கோவில்களுள் ஒன்றாக இருக்கப்போகும் ஸ்ரீ சுவாமி நாராயணன் திருக்கோவில் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

இந்த திருக்கோவில் ராபின்வில்லில் உள்ள பாப்ஸ் (BAPS) என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த கோவில் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோவில், உலகின் மிகப் பெரிய கோவில்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாரம்பரியத்தோடு நியூ ஜெர்சியில் குடிகொள்ளப் போகுகிறார் ஸ்ரீ சுவாமி நாராயணன் என்றே கூறவேண்டும் இக்கோவில் அமெரிக்காவில் அமைந்தாலும் முழுவதுமாக இந்திய கோவில் கடுமான கலையில் கட்டப்படுகின்றது.

மார்பில் கற்களால் உருவான இக் கோவில் முழுவதும் சிற்பக் கலைகளால் சூழ்ந்துள்ளது.162 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ள இக்கோயில் 42 அடி உயரம் மற்றும் 133 அடி அகலம் கொண்டுள்ளது., 13,499 சிற்ப வேலைபாடுகள் கொண்டுள்ள இந்த கோவிலில், 98 தூண்கள், 66 மயில் போன்ற வளையங்கள், 91 யானை சிற்பங்கள், 144 புனித கடவுள்களின் உருவங்களும் மற்றும் பல சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பில் கற்களால் செதுக்கப்பட்ட இந்த சிற்பங்களும் தூண்களும் நியூ ஜெர்சிக்கு செல்வதற்கு முன்பே இந்தியாவில் முழுவதுமாக செதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிதம்பர ரகசியம்! அதனைத் தாண்டி பல அறிவியல்! அனைத்தும் நிரம்பிய சிதம்பர நடராசர்! ஒரு சிறு பார்வை!

உலகின் மிகப்பெரிய விண்வெளி அராய்ச்சி மையம் நாசா. அங்கு, எந்த ஒரு சிறப்பு விக்ரகமும் இல்லை. நடராசர் சிலையைத் தவிற!

அது ஏன் என்று பார்க்கும் போது, ஒரு அறிவியல் விளக்கத்தோடு பதிலளிக்கின்றனர் அறிஞர்கள். சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக, பல கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான், ஒட்டுமொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

அதிசயத்தில் வாயப் பிளக்கும் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். சிதம்பரம் நடராஜர் கோயில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்கூறுடனும் பொருந்துவது குறிப்பிடத்தக்கது. கோயிலில் பொதிந்திருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாதவை. இதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிந்த நம் முன்னோர்கள், சிதம்பரத்தில் கோவில் கட்டி சிறந்த பூஜைகளுடன் வழிபட்டு வந்துள்ளனர்.

உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் பாதிப்பேர் கொசுக்களால் பரப்பப்படும் வைரஸ் நோய்களுக்கு இலக்காகும் நிலையில் உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.

மழைக் காலங்களில் இனப்பெருக்கம்  செய்வதால், மழையில் கொசுக்களால் பரவும் நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கொசுக்களால் பரவும் பல நோய்களுள் தற்போது மக்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது டெங்கு காய்ச்சல் தான்.

டெங்கு காய்ச்சலால், மேற்கு வங்கத்தில் மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் கொசுக்கள் ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயைக் முழுவதுமாக நிறுத்தும் அளவிற்கு அலோபதி மருந்துவம் முன்னேறவில்லை. இந்த நோய் ஏடிஸ் எஜிப்டி வகையைச் சேர்ந்த ‘அனோபிலஸ்’ என்ற பெண் கொசுக்கள் மூலம் பரப்பப்படுகிறது. நோய் தாக்கப்பட்ட உடன் சிகிச்சை பெற்றால் முழுவதுமாக குணமாக்க முடியும் என்றும், நோய் முற்றிவிட்டால் உயிரை காப்பாற்றுவது கடினம் என்கிறது மருத்துவத் துறை.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:

4 – 6 நாட்களுக்கு தொடர்ந்த காய்ச்சல் வரும்.

தலை வலி, உடல் வலி, கண் வலிகளுடன் கூடிய தசைப் பிடிப்பும் எலும்பு வலியும் வரும். சில நேரங்களில் மூக்கு, பல் போன்ற இடங்களில் ரத்தப்போக்கு ஏற்படும். மனிதனுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் எண்ணிக்கை குறையும்.

போர் விமானத்தில் இருந்து முதல்முறையாக ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: கடலில் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது

சுகோய் ரக போர் விமானத்தில் இருந்து முதல்முறையாக பிரம்மோஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது.

இந்திய பாதுகாப்புப் படையின் மிக முக்கியமான ஏவுகணை பிரம்மோஸ். இந்த ஏவுகணையை சுகோய்-30 எம்.கே.ஐ ரக ஜெட் போர் விமானத்தில் இருந்து செலுத்தி நேற்று சோதனை செய்து பார்க்கப்பட்டது.

வங்கக் கடலில் வைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாகத் தாக்கி பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை அழித்தது. போர் விமானத்தில் இருந்து முதல் முறையாக இந்த ஏவுகணையை செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இதன் மூலம் இந்திய விமானப் படையின் பலம் கூடுதலாகி உள்ளது.

சுகோய் ஜெட் விமானம் – பிரம்மோஸ் ஏவுகணை ஆகிய இரண்டும் சேர்ந்துள்ளதால் இனி சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் போன்றவற்றை நடத்துவது முன்பை விட எளிமையாகி உள்ளது. பிரம் மோஸ் ஏவுகணை 3,200 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக் கூடிய வல்லமை படைத்தது. தரை, கடல், வான்வெளி என எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த ஏவுகணையைச் செலுத்த முடி யும் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையடுத்து, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள் ளார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் செயற்கைகோளின் மேல் அமைக்கப்பட்டிருந்த வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் செயற்கைகோள் தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் விண்ணில் செயற்கைகோளை செலுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வியடைந்தது. இதனால் இஸ்ரோ வரும் காலங்களில் ஏவப்படும் ராக்கெட்டுகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறோம். வரும் டிசம்பர் இறுதியில் தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ உள்பட 31 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவது தான் அடுத்த இலக்காக உள்ளது. அதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.