Home Archive by category Recent News (Page 3)

Recent News

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியா முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அனைத்து மாநிலங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், சனாதன சக்திகள் தங்கள் கொள்கையாக கொண்டிருப்பதாகவும், . இதனால்தான் ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்பதை நடைமுறைப்படுத்திட பா.ஜ.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக முனைந்து செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 தற்போது இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முன்பைவிட மூர்க்கத்தனமான வேகத்தில் இயங்கத் தொடங்கி இருப்பதாகவும்,

ஒரே தேர்தல்; ஒரே தேசிய கல்விக் கொள்கை; ஒரே சுகாதாரக் கொள்கை; ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே வரி என்பதில் தொடங்கி, தற்போது நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை எனும் திட்டத்திற்கு அகரம் எழுதி உள்ளனர் எனவும் அவர் சாடியுள்ளார்.

டெல்லியில் மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் தலைமையில் நடந்த மாநில உணவுத்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதும் ஒரே குடும்ப அட்டை முறைக் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்

உணவு தானியப் பொருட்களை அரசு வாங்குவது முதல் மக்களுக்கு விநியோகம் செய்வது வரை அனைத்தையும் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புக்குள் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும்,  பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த ‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் ராமவிலாஸ் பஸ்வான்நேற்று மாநிலங்களவையில் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவிநியோகத் திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திவரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது என்றும் . இதனைச் சீர்குலைக்கவும், வட இந்தியாவிலிருந்து புலம்பெயரும் மக்களை ஊக்குவித்துத் தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் வலிந்து குடியேற்றவும், ஏழை – எளிய சாதாரண தொழிலாளர்களுக்கு பொது விநியோக முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என பா.ஜ.க. அரசு ஒரே நாடு;ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை அறிமுகம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது விநியோகமுறை என்பது மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலின் கீழ் வருவதைப் பயன்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என அவர் கூறியுள்ளார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதும், அதனைக் கண்காணிப்பதும்,முறைகேடுகள் இருந்தால் அவற்றைக் களைந்து, செம்மையாக செயல்படுத்துவதும் மாநில அரசுகளின் முழு முதற் கடமைஎனவும்,  இது முழுக்க முழுக்க மாநிலங்களின் நேரடியான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, மத்திய அரசு மூக்கை நுழைப்பது வேண்டாத வேலை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது மாநிலங்களை நகராட்சிகளைவிடக் கேவலமாக நடத்துவதற்கான சதித் திட்டம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியில் அதிகாரக் குவிப்பு என்பதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு பா.ஜ.க. அரசு ‘நிதி ஆயோக்’ வடிவமைத்துத் தருவதை செயல்படுத்த மோடி அரசு துடிப்பது கூட்டாட்சிக் கோட்பாட்டை சீர்குலைப்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை என்றும்  பொது விநியோக முறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம். இந்தியா முழுவதும் உணவுப் பழக்க வழக்கங்களையும் ஒரே முறையில் மாற்ற வேண்டும் என்கிற பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் நாட்டில் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, மத்திய அரசு ‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அவர்  வலியுறுத்தியுள்ளார் .

குடும்ப அட்டைத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிற தமிழக அரசு, பா.ஜ.க. அரசின் ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை ஏற்கக் கூடாது என்றும்  அதை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீரகப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு காணலாம். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும்.

சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.

நோய் நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். எப்படியெனில் நாவல் பழங்களானது மெலனினை செல்களாக செய்யத் தூண்டுகிறது.

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது. பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் அதே பகுதியில் வசிக்கும் தர்ஷினி ப்ரியா  என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தம்பியின் காதலுக்கு அண்ணன் வினோத் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு  கனகராஜை வினோத் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனை தடுக்க முயன்ற அவரது காதலி தர்ஷினி ப்ரியாவும் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து   வினோத்தை காவல்துறையினர் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில்  கோவை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தர்ஷினி பிரியா,  இன்று காலை உயிரிழந்தார்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தர்ஷினி ப்ரியாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய கந்தவேலுசின்ராஜ் உள்பட மூன்று பேரை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்

தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என பல தலைவர்கள் பேசியபோதிலும், தனக்கு மட்டும் கட்சியில் நெருக்கடி தரப்படுவதாக  கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் சென்னையில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அன்பை பெற்றவன் என்றும்,  அவருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்  என்றும கூறினார்.எந்த கட்சிக்கும் போகப் போவதில்லை எனவும், தான் மிகவும் மதிக்கும் தலைவரான ப.சிதம்பரத்துக்கு விசுவாசமாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் பல தலைவர்கள் பேசினார்கள் என்றும் . ஆனால், தனக்கு மட்டும் கட்சியில் நெருக்கடி தரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு தெரிந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையா? அல்லது நேரடியாக வேணுகோபால் எடுத்தாரா? என தெரியவில்லை என்று அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் சொத்தை கொள்ளையடித்த கோபண்ணா, புத்தகம் போட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்தவர் என்றும்  மூடப்பட்ட பத்திரிகையின் பெயரில் பாஸ் அச்சடித்து விற்பனை செய்தவர்  என்றும் அவர் சரமாரியாக குற்றம்சாட்டினார். தன் மீதான நடவடிக்கைக்கு கோபண்ணாதான் காரணம் என்றும் அவர் மீது நாளைசென்னை காவல்துறை ஆணையர் அலுலவகத்தில் புகார் கொடுக்க போவதாகவும் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள கொந்த்வா என்ற பகுதியில் அடிக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சுற்றுசுவரை ஒட்டி பள்ளத்தில் அமைந்திருந்த குடிசைகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,  பலத்த மழை பெய்ததால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும், இதன்மூலம் கட்டுமான நிறுவனத்தின் அலட்சியமான பணி வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பெரும்பாலானோர் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

தமிழக தலைமை செயலாளராக சண்முகம், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது ,தலைமை செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2016 -ம் ஆண்டு  டிசம்பரில் பொறுப்பேற்றார்;இவர் நாளை ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது நிதித் துறை கூடுதல் தலைமை செயலராக உள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருந்தே சண்முகம் நிதித்துறை செயலர் பொறுப்பை கவனித்து வருகிறார்.தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் பதவி காலம் 2017ல் முடிவடைந்தது. அவருக்கு தமிழக அரசு இரண்டாண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கியது. இம்மாதம் 30ம் தேதியுடன் அவருடைய பதவி காலம் முடிவடைவதை அடுத்து புதிய டி.ஜி.பி. நியமன பணிகள்தொடங்கின.

பணிமூப்பு அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜாங்கிட்,  திரிபாதி, காந்திராஜன், ஜாபர்சேட், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, உள்ளிட்ட 14 பேர் பெயர் பட்டியலை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பியது. இதில் சிறப்பாக செயல்பட்ட மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை இறுதி செய்து தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக திரிபாதி நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறுபான்மை மக்களின் நலன் மற்றும்  மேம்பாடு குறித்ஆலோசனை கூட்டம் வேலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் துணை தலைவர் ஜார்ஜ் குரியன்கலந்துகொண்டு உரையாற்றினார்.

 மதாசார்பின்மைக்கு பிறநாடுகளுக்கு  எடுத்து கட்டாக இந்தியா திகழ்ந்து வருவதாக தெரிவித்தார் ,  சீனாவில் 10லட்சம் இஸ்லாமியர்கள்  சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும்,  மியான்மர் நாட்டில் இஸ்லாமியர்கள்வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்,  ஆனால் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்புடனும்மத நல்லிணக்கத்துடனும் இருப்பதாகவும்,  அதற்கு நீதித்துறையும் சட்டங்களும்தான்  காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சிறுபான்மையின  மக்கள் திரளானோர்கலந்துகொண்டனர்

பாரதிராஜாவின் அதிரடி அறிவிப்பு! தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சிதயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமனம் செய்த தனி அதிகாரியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான பாரதிராஜா உள்பட ஏழு பேர்கள் இணைந்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையால் தயாரிப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த அறிக்கையில், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம். நமது சங்கத்திற்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு கடந்த ஜூன் 23ஆம்  தேதி நடைபெற்ற பேசுவார்த்தையின் அடிப்படையில்
1. ஜூன் 29 முதல் தயாரிப்பாளர்கள் திரையி டும் பிரிவியூ காட்சி  லும் காட்சி தேவைப்படும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஹார்ட் டிஸ்க்கை கியூபில் கொடுத்து தங்களது திரைப்படத்தின் டிசிபிஐ காப்பி செய்து லைஃப் டைம் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.2. ஜூலை 12 முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் ஒரு நிமிட டிரைலர்களுக்கு கட்டணம் இல்லை3. தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களுக்கான லைஃப் டைம் கியூப்புக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் ஷிப்டிங் வசதி உண்டு என்று கியூப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இயக்குனர் ஏ.எல்.விஜய் 2வது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், அவரை திருமணம் செய்யப்போகும் பெண் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஏ.எல்.விஜய், கீரிடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ’பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ ஆகிய படங்களை இயக்கினார்.

தெய்வ திருமகள் படத்தின் போது அந்த படத்தில் நடித்த அமலா பாலுடன் காதல் வயப்பட்டு 2014 ஆம் திருமனம் செய்துக்கொண்டு, கருத்து வேறுபாடி காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் விஜய்யின் 2வது திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியானது.

தற்போதும் அதேபோல் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா டாக்டர். பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறாராம். அடுத்த மாதம் 11ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தனது முதல் 5G ஸ்மார்ட்போனை வெளியிடும் ஹானர்…
2019-ஆம் ஆண்டின் இறுதியில் ஹவாயின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம், முதல் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது!

2019-ஆம் நான்காம் காலாண்டில் தங்கள் நிறுவனத்தின் முதல் 5G ஸ்மார்ட் போனை வெளியிட இருப்பதாக ஹானர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஷாங்காயில் நடைபெற்ற 2019 உலக மோபைல் காங்கிரஸ் மாநாட்டில், ஹானர் நிறுவனத்தின் தலைவரான ஜார்ஜ் ஜாய் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

5G வசதியுடன் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், சிறந்த சிறப்பம்சங்களை கொண்டு வெளியாகும் என அந்நிறுவனம் தலைவர் ஜார்ஜ் ஜாய் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை 2020-ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் எண்ணிக்கையை தொடும் எனவும் ஜாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்தகவலை வெளியிட்ட ஜாய், இதன் விலை மற்றும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடயே நடந்து வரும் வர்த்தகப் போரில் ஹவாய் சர்ச்சைகளின் மையமாக இருந்து வருகிறது. அமெரிக்கா ஆளும் ட்ரம்பின் நிர்வாகம் பிற நாட்டு பொருட்களுக்கு தங்கள் பிராந்தியத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது, குறிப்பாக வரவிருக்கும் சூப்பர்-ஃபாஸ்ட் 5G நெட்வொர்க்குகள், உலகளாவிய திட்டமான ஹவாய் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், 5G வணிகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஹவாய் தெரிவிக்கின்றது.

மேலும், தற்போதைய 5G தொழில்நுட்ப தீர்வுகள் பொருளாதாரத் தடைகளால் முற்றிலும் பாதிக்கப்படவில்லை என்பதை இங்குள்ள அனைவருக்கும் நான் தெளிவாகக் கூற முடியும்” என்று ஹாங்காயின் துணைத் தலைவர் கென் ஹு ஷாங்காயில் நடந்த மொபைல் உலக காங்கிரசில் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.