Home Archive by category Science

Science

ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்களை நாம் சந்திக்கின்றோம். தினசெரி கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை தயாரித்து உண்ணலாம். அவற்றையும் மிகக் குறைந்த அளவில்தான் பயன்படுத்த வேண்டும்.
பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அதையே தொடர்ந்து சாப்பிடுவதால் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள், மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்குமாம். அதனால் ஊறுகாயை தவிர்ப்பது நல்லது.

ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய் இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிகம் இருப்பதால் அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போ

இந்திய விண்வெளி ஆய்வு மையம் ‘ககன்யான்’ திட்டம் மூலம் 2021-ம் ஆண்டில் விண்வெளி ஆய்வுக்காக விஞ்ஞானிகளை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது.

மேலும் பூமி கண்காணிப்பு, காலநிலையை முன்கூட்டி அறிந்து கொள்வது, தொலைதொடர்பு வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தி அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பாதுகாப்புக்கான செயற்கைகோள்களை அதிக அளவு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

நாட்டின் பாதுகாப்பு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது. இதனை படிப்படியாக விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பூமி கண்காணிப்புக்கான 8 செயற்கைகோள்கள் அடுத்த மாதத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது

சென்னை ஆவடியை அடுத்த தனியார் பல்கலைகழகத்தில் உலகளாவிய பருவ நிலை மாற்றம் நிலையான முன்னேற்றம் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் பொதுவியல் துறை சார்பில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஜப்பான் கும்மோட்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ராஜி அடேவா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்குவது அனைவரது கடமை எனக் கூறினார். இந்த கருத்தரங்கில் 122  ஆராய்ச்சி கட்டுரைகள் தொகுத்து புத்தகமாக வெளியிடபட்டது. மேலும் பல்வேறு  நாடுகலிருந்து 100கும் மேற்ப்பட்ட பிரதிநிதிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட்டுரைகளை பகிர்ந்து கொண்டனர். இதில் மலேசியா கிஸ்வா பொறியியல் துறை பேராசிரியர் சாய்னா கங்காதரன், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் துணை இயக்குநர் சாய் பிரசாத்,பேராசிரியர் சாந்த குமார்,பேராசிரியர் வெங்கட் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி 4 ரிசாட் வகை செயற்கைகோள்களையும், கார்ட்டோசாட் 3 வகை செயற்கைகோள் ஒன்றையும் விண்ணில் செலுத்தவுள்ளது.

இந்த ரிசாட் வகை செயற்கை கோள்களால் அனுப்பப்பட்ட வரைபடங்களை வைத்தே பாலக்கோட்டில் தீவிரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் அதிகரித்து வரும் சீனக் கடற்படை செயல்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு சார்ந்த செயற்கைகோள்களை அதிக அளவில் செலுத்த உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் ஜிசாட் வகை செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. பருவமழை முடிவடைவதற்குள் பனிக்காலம் தொடங்கியது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழக்கத்தைவிட பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்தது. மலைப்பகுதிகளில் உறைபனி வாட்டி வதைத்தது.

தமிழகத்தில் தற்போது வெயில் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் கொடுமை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,தமிழகத்தில் 9 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதாக தெரிவித்துள்ளது. சேலம், கரூர், பரமத்தியில் தலா 104 டிகிரியும் , திருச்சி, தருமபுரியில் தலா 102 டிகிரியும், வேலூர், மதுரை தலா  101 டிகிரியும் , நாமக்கல், பாளையங்கோட்டையில் தலா  100 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பொதுவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாகக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் உளவு பணிகளுக்காக இஸ்ரோ உருவாக்கிய 436 கிலோ எடை கொண்ட எமிசாட் செயற்கைகோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., – சி 45 ராக்கெட் இன்று காலை 9.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லித்துவேனியா ஆகிய நாடுகளுடைய 28 செயற்கைகோள்களை சுமந்த படி பி.எஸ்.எல்.வி., – சி 45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.

அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா நாட்டின் 2 செயற்கைக்கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக்கோளும் பிஎஸ்எல்வி – சி 45 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட்டது.

உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் பாதிப்பேர் கொசுக்களால் பரப்பப்படும் வைரஸ் நோய்களுக்கு இலக்காகும் நிலையில் உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.

மழைக் காலங்களில் இனப்பெருக்கம்  செய்வதால், மழையில் கொசுக்களால் பரவும் நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கொசுக்களால் பரவும் பல நோய்களுள் தற்போது மக்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது டெங்கு காய்ச்சல் தான்.

டெங்கு காய்ச்சலால், மேற்கு வங்கத்தில் மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் கொசுக்கள் ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயைக் முழுவதுமாக நிறுத்தும் அளவிற்கு அலோபதி மருந்துவம் முன்னேறவில்லை. இந்த நோய் ஏடிஸ் எஜிப்டி வகையைச் சேர்ந்த ‘அனோபிலஸ்’ என்ற பெண் கொசுக்கள் மூலம் பரப்பப்படுகிறது. நோய் தாக்கப்பட்ட உடன் சிகிச்சை பெற்றால் முழுவதுமாக குணமாக்க முடியும் என்றும், நோய் முற்றிவிட்டால் உயிரை காப்பாற்றுவது கடினம் என்கிறது மருத்துவத் துறை.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:

4 – 6 நாட்களுக்கு தொடர்ந்த காய்ச்சல் வரும்.

தலை வலி, உடல் வலி, கண் வலிகளுடன் கூடிய தசைப் பிடிப்பும் எலும்பு வலியும் வரும். சில நேரங்களில் மூக்கு, பல் போன்ற இடங்களில் ரத்தப்போக்கு ஏற்படும். மனிதனுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் எண்ணிக்கை குறையும்.

போர் விமானத்தில் இருந்து முதல்முறையாக ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: கடலில் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது

சுகோய் ரக போர் விமானத்தில் இருந்து முதல்முறையாக பிரம்மோஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது.

இந்திய பாதுகாப்புப் படையின் மிக முக்கியமான ஏவுகணை பிரம்மோஸ். இந்த ஏவுகணையை சுகோய்-30 எம்.கே.ஐ ரக ஜெட் போர் விமானத்தில் இருந்து செலுத்தி நேற்று சோதனை செய்து பார்க்கப்பட்டது.

வங்கக் கடலில் வைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாகத் தாக்கி பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை அழித்தது. போர் விமானத்தில் இருந்து முதல் முறையாக இந்த ஏவுகணையை செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இதன் மூலம் இந்திய விமானப் படையின் பலம் கூடுதலாகி உள்ளது.

சுகோய் ஜெட் விமானம் – பிரம்மோஸ் ஏவுகணை ஆகிய இரண்டும் சேர்ந்துள்ளதால் இனி சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் போன்றவற்றை நடத்துவது முன்பை விட எளிமையாகி உள்ளது. பிரம் மோஸ் ஏவுகணை 3,200 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக் கூடிய வல்லமை படைத்தது. தரை, கடல், வான்வெளி என எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த ஏவுகணையைச் செலுத்த முடி யும் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையடுத்து, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள் ளார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் செயற்கைகோளின் மேல் அமைக்கப்பட்டிருந்த வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் செயற்கைகோள் தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் விண்ணில் செயற்கைகோளை செலுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வியடைந்தது. இதனால் இஸ்ரோ வரும் காலங்களில் ஏவப்படும் ராக்கெட்டுகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறோம். வரும் டிசம்பர் இறுதியில் தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ உள்பட 31 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவது தான் அடுத்த இலக்காக உள்ளது. அதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.