அரசியல்தமிழ்நாடு

செங்கல்பட்டில் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

செங்கல்பட்டில், அமைக்கப்பட உள்ள சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மைய கட்டிடங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதாரத்துறையின் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவல்ல, 10 கோடி ரூபாய் மதிப்பிலான PET CT ஸ்கேன் சேவை மையத்தை அவர் தொடங்கி வைத்தார்.  செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50 ஏக்கர் பரப்பளவில் அமையும் சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த மையத்தில், இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, யோகா சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் உடனடி உதவி தொலைபேசி வசதியை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார். திருப்பூர், நாமக்கல், கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, திருச்சி, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்களின் பயன்பாட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Tags
Show More

Related News

Back to top button
Close