தமிழ்நாடு

சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தையை திண்டுகல்லில் மீட்டெடுத்தனர் காவலர்கள்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜார் அலி, மெர்ஜினா தம்பதிகளின் 2 வயது பெண் குழந்தையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி இரவு மர்ம நபர் தூக்கிச்சென்றுவிட்டார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில், திண்டுக்கல் அருகே உள்ள பாளையம் ரயில் நிலையம் வந்தபோது சந்தேகத்திற்கு இடமான நிலையில் கையில் சிறுவயது குழந்தையுடன் ஒருவன் இருப்பதாக போலீசாருக்கு பயணிகள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய மேற்கு வங்க மாநிலம் குல்டிகிரி பகுதியைச் சேர்ந்த தீபக் மண்டல் என்பவனையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் மீட்கப்பட்ட குழந்தை சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து காணாமல் போனதுதான் என்பது தெரியவந்தது. பின்னர் குழந்தை ரஷீதா மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தீபக் மண்டல் ஆகிய இருவரையும் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் திண்டுக்கல் போலீஸார் ஒப்படைத்தனர். சென்னை அழைத்துவரப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related News

Back to top button
Close