தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் மழையால் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விபத்திற்குள்ளானது. இதில் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 15 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற மீட்புப்படையினர் மற்றும் போலீசார் இதுவரை 17 சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரழந்தவர்களில் 7 வயது சிறுவர், சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை அடங்குவர். 4 குடும்பத்தை சேர்ந்த அனைவருமே இந்த சம்பவத்தில் உயிர் இழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Show More

Related News

Back to top button
Close